முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்யாவில் 2 நாட்களாக தவித்த பயணிகளுடன் சான் பிரான்சிஸ்கோவில் தரையிறங்கியது ஏர் இந்தியா விமானம்

வியாழக்கிழமை, 8 ஜூன் 2023      உலகம்
Air-India 2023-07-01-2023

சான் பிரான்சிஸ்கோ, ரஷ்யாவில் 2 நாட்களாக பரிதவித்து வந்த பயணிகளை சுமந்து சென்ற ஏர் இந்தியா விமானம் சான்பிரான்சிஸ்கோவில் பாதுகாப்பாக தரையிறங்கியது. 

டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகர் நோக்கி கடந்த செவ்வாய் கிழமை ஏ.ஐ.173 என்ற எண் கொண்ட ஏர் இந்தியாவின் போயிங் 777 ரக விமானம் புறப்பட்டு சென்றது. விமானத்தில் 216 பயணிகள் மற்றும் 16 விமான ஊழியர்கள் பயணம் செய்தனர். நடுவானில் திடீரென விமான என்ஜின்களில் ஒன்று பழுதடைந்து உள்ளது. இதனால், ரஷ்யாவின் மகதன் விமான நிலையம் நோக்கி ஏர் இந்தியா விமானம் திருப்பி விடப்பட்டு, பாதுகாப்பாக தரையிறங்கியது. 

விமானத்தில், குழந்தைகள், வயது முதிர்ந்தோர் என பயணித்த அனைவரையும் பஸ்களில் அழைத்து சென்று பள்ளி மற்றும் கல்லூரிகளில் தங்க வைத்தனர். 

மும்பையில் இருந்து மாற்று விமானம் ஒன்று அனுப்பி வைக்கப்படும். அந்த விமானத்தில் மகதன் நகரில் இருந்து பயணிகள் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு கொண்டு செல்லப்படுவார்கள் என ஏர் இந்திய விமான நிறுவனம் கூறியிருந்தது. வேறொரு விமானம் வருவதற்கும், தரையிறங்குவதற்கும் ரஷ்ய விமான போக்குவரத்து கழகம் அனுமதி அளித்தது. 

இதன்படி, மும்பையில் இருந்து ஏர் இந்தியா நிறுவனத்தின் ஏ.ஐ.173டி எண் கொண்ட விமானம் ஒன்று புறப்பட்டு மகதன் நகருக்கு சென்றது. அதன் பின்னர், 2 நாட்களாக பரிதவித்த பயணிகளை ஏற்றி கொண்டு, நேற்று காலை 10.27 மணியளவில் அமெரிக்காவுக்கு புறப்பட்டது. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் நேற்று மதியம் 12.07 மணியளவில் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது. 

எங்களுடைய பயணிகள் அனைவருக்கும் தேவையான உதவிகள் அளிக்கப்பட்டு உள்ளன. வேண்டிய பிற வசதிகளும் வழங்கப்பட்டு உள்ளன என ஏர் இந்தியா நிறுவனம் டுவிட்டரில் தெரிவித்து உள்ளது. அரசு அமைப்புகள், ஒழுங்குமுறை ஆணையங்கள், தங்களுடைய பணியாளர்கள் உள்பட, விமான பயணிகளை சான் பிரான்சிஸ்கோவுக்கு கொண்டு செல்லும் முயற்சிக்கு ஆதரவாக இருந்தவர்களுக்கு தனது நன்றியையும் அந்த விமான நிறுவனம் தெரிவித்து கொண்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 1 week 1 day ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 days ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 1 month 4 days ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 2 months 10 hours ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 10 hours ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 2 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து