முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில் விண்ணப்பிப்பவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை நிச்சயமாக கிடைக்கும் : சிதம்பரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

செவ்வாய்க்கிழமை, 15 ஜூலை 2025      தமிழகம்
cm 2025-01-23

Source: provided

கடலூர் : தமிழகம் ஓரணியில் இருக்கும் போது டெல்லி அணியின் எந்த காவி திட்டமும் இங்கே பலிக்காது என சிதம்பரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மேலும், உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் விண்ணப்பிப்பவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை நிச்சயமாக கிடைக்கும்  என்றும் அவர் தெரவித்தார்.

3,563 இடங்களில்... 

'உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தை, கடலுார் மாவட்டம், சிதம்பரம் நகராட்சியில் உள்ள வாண்டையார் திருமண மண்டபத்தில், நேற்று முதல்வர் துவக்கி வைத்தார். முதல்கட்டமாக, 3,563 இடங்களில் முகாம்கள் நடைபெறுகின்றன. மக்களிடம் மனுக்களை முதல்வர் ஸ்டாலின் பெற்றுக் கொண்டார். உங்களுடன் முதல்வர் திட்டத்தில் பெறப்படும் மனுக்களுக்கு, 45 நாட்களில் தீர்வு காணப்படும். ரேஷன் கார்டு, ஆதார் கார்டு பெயர் மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு, அன்றைய தினமே தீர்வு காணப்படும். நேற்று துவங்கி நவம்பர் மாதம் வரை, 10,000 முகாம்கள் நடைபெற உள்ளன.

பிரத்யேக இணையதளம்...

நகரப்பகுதிகளில் 3,768, ஊரகப் பகுதிகளில் 6,232 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.இன்று துவங்கி ஆகஸ்ட் 15 வரை, முதற்கட்டமாக 3,563 முகாம்கள் நடத்தப்பட உள்ளன. நகர்ப்புறங்களில் 1,428 முகாம்களும், ஊரகப் பகுதிகளில் 2,135 முகாம்களும் நடக்க உள்ளன. 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ், மாவட்டங்களில் முகாம் நடைபெற உள்ள இடத்தின் விவரங்களை அறிய பிரத்யேக இணையதளத்தை தமிழக அரசு தொடங்கி உள்ளது.

மனுக்களுக்கு தீர்வு.... 

பின்னர் சிதம்பரத்தில் இளையபெருமாள் நூற்றாண்டு அரங்கம் திறப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: காமராஜர் பிறந்தநாளில் மாபெரும் முன்னெடுப்பாக உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளேன். உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம் காரணமாக அரசு மேல் நம்பிக்கை வைத்து இன்னும் பலர் கோரிக்கை மனுக்களை வழங்கினர். மக்களுடன் முதல்வர் திட்டத்தின் மூலம் 5,000 முகாம்கள் நடத்தி பல லட்சம் மனுக்களுக்கு தீர்வு கண்டோம். தகுதி இருந்தும் ரூ.1000 உரிமைத் தொகை கிடைக்காதவர்கள், முகாமில் விண்ணப்பம் கொடுத்தால் போதும் நிச்சயம் உரிமைத் தொகை கிடைக்கும். மக்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று அரசின் சேவையை வழங்குவது தான் திட்டத்தின் நோக்கம்.

நேரம்தான் இல்லை.... 

உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் விண்ணப்பிக்கும் மகளிருக்கு, நிச்சயம் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும். லிஸ்ட் பெருசா இருக்கு. சொல்ல நேரம்தான் இல்லை. ஆனால் நெஞ்சை நிமிர்த்தி சொல்கிறேன். தமிழகம் வரலாற்றில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து இருக்கிறோம். இந்த திட்டங்கள் மட்டும் போதுமா என்றால் கேட்டால் போதாது.  

ஓரணியில் தமிழ்நாடு...

திராவிட மாடல் அரசுக்கு துணையாக கூட்டணி கட்சியின் தலைவர்கள் உள்ளனர். மார்க்ஸிய, அம்பேத்கர் இயக்க தலைவர்கள் ஒற்றுமையாக இருப்பதுதான் ஓரணியில் தமிழ்நாடு. தமிழ்நாடு ஓரணியில் இங்கு இருக்கும்போது எந்த டெல்லி அணியின் காவித் திட்டமும் பலிக்காது. ஆதி திராவிட, பழங்குடியின மக்களுக்கு அதிக திட்டங்களை தந்தது தி.மு.க. அரசு. அரசின் சமூக சீர்திருத்த திட்டங்களுக்கு கூட்டணி கட்சிகள் துணையாக இருக்கின்றன. தமிழ்நாடு வரலாற்றிலேயே பட்டியலின மக்களுக்கு அதிக திட்டங்கள் வழங்கியுள்ளோம். சமூக நீதி பயணம் நீண்ட நெடியது. அதற்கு காலம் தேவைப்படும். எல்லாம் மாறும்.. மாற்றுவேன். இவ்வாறு அவர் பேசினார்.

மார்க்ஸிய, அம்பேத்கர் இயக்க தலைவர்கள் ஒற்றுமையாக இருப்பதுதான் ஓரணியில் தமிழ்நாடு. தமிழ்நாடு ஓரணியில் இங்கு இருக்கும்போது எந்த டெல்லி அணியின் காவித் திட்டமும் பலிக்காது.

- முதல்வர் மு.க.ஸ்டாலின்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து