முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு மரியாதையுடன் சொந்த ஊரில் நடிகை சரோஜாதேவி உடல் நல்லடக்கம்

செவ்வாய்க்கிழமை, 15 ஜூலை 2025      சினிமா
Saroja-Devi

பெங்களூரு, மறைந்த பழம்பெரும் நடிகை சரோஜா தேவி  உடல் அவரது சொந்த ஊரில் துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் பிறந்த சரோஜா தேவி 16 வயதில் சினிமாவில் நடிக்க தொடங்கினார். கன்னடத்தில் ஹொன்னப்ப பாகவதரின், மஹாகவி காளிதாஸ் என்ற படத்தில் அறிமுகமானார். அதன்பின் தமிழ் திரையுலகுக்கு வந்த இவர், எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ரவிச்சந்திரன் உட்பட பல நட்சத்திர நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். தெலுங்கு, ஹிந்தியிலும் நடித்துள்ள இவர் ஏறக்குறைய 200 படங்கள் நடித்துள்ளார்.

பெங்களூரின் மல்லேஸ்வரத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்த அவர், வயது முதிர்வு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று முன்தினம் காலை 8:30 மணியளவில் காலமானார். அரசியல் தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள் என, பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். கர்நாடகா முதல்வர் சித்தராமையா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். நேற்று காலை 11:30 மணி வரை, அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.

பின்னர் சரோஜா தேவியின் சொந்த ஊரான ராம்நகர், சென்னப்பட்டணாவின், தஷாவரா கிராமத்திற்கு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அவரது உடல் எடுத்து செல்லப்பட்டது. வழிநெடுக ரசிகர்கள் பலர் அவருக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். பின்னர் தஷாவரா கிராமத்தில் துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு சார்பில் மரியாதை செய்யப்பட்டது. பின்னர் ஒக்கலிகர் சம்பிரதாயப்படி சரோஜாதேவியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இறுதிச்சடங்கில் கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் கலந்து கொண்டார். மேலும் திரையுலகை சேர்ந்த ராக்லைன் வெங்கடேஷ், ஜெயமாலா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.   கண்கள் தானம் சரோஜா தேவி திரைமறைவில் பல பொது சேவைகள் செய்தவர். தன் கண்களை தானம் செய்துள்ளார். நேற்று முன்தினம் மருத்துவ குழுவினர் அவரது கண்களை தானமாக பெற்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து