முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகளிர் உரிமை தொகை பெற விண்ணப்ப படிவம் வெளியீடு

சனிக்கிழமை, 8 ஜூலை 2023      தமிழகம்
TN 2023-04-06

Source: provided

சென்னை,  மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகளின் விவரங்களை தேர்ந்தெடுக்கும் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் இத்திட்டத்திற்கான விண்ணப்ப படிவத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தி.மு.க. சட்டமன்ற தேர்தல் அறிக்கையில், 'பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும்' என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. தி.மு.க. அரசு அமைந்த பின்னர், இந்த திட்டம் எப்போது தொடங்கப்படும்? என்ற எதிர்பார்ப்பு இல்லத்தரசிகள் மத்தியில் அதிகரித்தது. இதற்கிடையே தமிழ்நாடு அரசு கடந்த 2023-24-ம் ஆண்டு தாக்கல் செய்த பட்ஜெட்டில், இந்த திட்டத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த திட்டம் அண்ணா பிறந்தநாளான வருகிற செப்டம்பர் 15-ந் தேதி தொடங்கி வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. ரூ.1,000 கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகளின் விவரங்களை தேர்ந்தெடுக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. பயனாளிகள் தொடர்பாக சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள நியாய விலைக்கடைகள் கண்டறியப்பட்டுள்ளன. குடும்ப அட்டை எண்ணிக்கையின் அடிப்படையில் பள்ளிகள், சமுதாய கூடங்கள், அரசு அலுவலகங்கள், இரவு காப்பகங்கள் என தேவையான முகாம்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

முகாம்கள் நடைபெறும் இடங்களில் குடிநீர், மின்விசிறி, இருக்கைகள், சாய்வு நடைபாதை, முதலுதவிப் பெட்டி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன தேவையான இடங்களில் பந்தல்கள், மாற்றுத் திறனாளிகள், முதியோர்கள், கர்ப்பிணிகள் போன்றோருக்கு தேவையான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கிடையே மகளிருக்கான ரூ.1000 உரிமை தொகை பெறும் திட்டத்திற்கான விண்ணப்படிவத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மகளிர் உரிமை தொகை யார், யாருக்கு கிடைக்கும் கிடைக்காது என்பது குறித்து தமிழக அரசு செய்தி குறிப்பை வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கான விண்ணப்படிவத்தை வெளியிட்டுள்ளது. 

விண்ணப்ப படிவத்தில் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் வயது தொழில் , மாத வருமானம் வருமானவரி வங்கி, ஆதார் எண், குடும்ப அட்டை எண் உள்ளிட்ட 13 கேள்விகள் விண்ணப்ப படிவத்தில் இடம் பெற்றுள்ளன. மேலும் தொலைபேசி எண், வசிப்பது சொந்தவீடா வாடகை வீடா என்றவிவரங்கள் கேட்கப்பட்டுள்ளது. சொத்து விவரங்கள் நிலை உடைமை, வாகனவிவரங்களும் விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். மேலும் உரிமை தொகைக்கு விண்ணப்பிப்போர் ஆதார் அட்டை , குடும்ப அட்டை, மின் கட்டண அட்டை மற்றும் வங்கி பாஸ் புத்தகம் உள்ளிட்டவை விண்ணப்பிக்கும் முகாமிற்கு எடுத்துவர வலியுறுத்தப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து