முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இரு சக்கர வாகனத்தில் சாகசம்: டி.டி.எப். வாசன் மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு

திங்கட்கிழமை, 18 செப்டம்பர் 2023      தமிழகம்
Jail

Source: provided

சென்னை : இருசக்கர வாகன பயணத்தின் சாகசம் செய்ய முயன்றபோது விபத்துக்குள்ளான டிடிஎப் வாசன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

டிடிஎஃப் வாசன் என்பவர் இருசக்கர வாகன பயணத்தின் மூலம் யூடியூப்பில் பிரபலமானவராக அறியப்படுகிறார். யூடியூப்பில் தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள இவர் அடிக்கடி அதிவேகமாக பயணம் செய்து சாகசங்களை மேற்கொண்டு வருவார். இந்தநிலையில், காஞ்சிபுரத்திற்கு அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகன பயணத்தின்போது முன் சக்கரத்தைத் தூக்கி சாகசம் முயன்றுள்ளார்.

அப்போது, கட்டுப்பாட்டை இழந்த வாகனம் 2 முறை தலைகீழாக சுழன்று சாலையோர பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், டிடிஎஃப் வாசன் கையில் படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இந்த நிலையில், டிடிஎஃப் வாசன் மீது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டியது, கவனக்குறைவாகச் செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பாலுசெட்டி சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.  டிடிஎப் வாசன் மஞ்சள் வீரன் என்கிற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 weeks 1 day ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 week ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 1 month 1 week ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 2 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 2 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து