முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மாநகர மத்திய 6-ம் பகுதி சார்பில் கூட்டம்: அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு தி.மு.க. அரசு மூடுவிழா : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு

திங்கட்கிழமை, 18 செப்டம்பர் 2023      தமிழகம்
Sellur-Raju

Source: provided

மதுரை : அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களுக்கு தி.மு.க. அரசு மூடு விழா கண்டுள்ளது என்று மதுரை பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. தெரிவித்தார். 

பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மத்திய 6-ம்பகுதி அ.தி.மு.க. செயலாளர் எம்.ஜி.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.சிறப்புரையாற்றினார். இதில் நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா எம்.எஸ். பாண்டியன், பா. குமார், டாக்டர் சரவணன் பரவை ராஜா, சக்திமோகன்,கு. திரவியம், எம்.எஸ்.கே.மல்லன், வி.பி.ஆர்.செல்வகுமார், ஆர்.கே.ரமேஷ், தளபதி மாரியப்பன், சக்திவிநாயகர் பாண்டியன், ஜெயபாண்டி, ரவிராஜ், விநாயகமூர்த்தி, சுகந்திஅசோக், பி.ஆர்.சி.ஜெயராஜ், பாண்டிச்செல்வி ஞானசேகரன், ஜோசப்தனிஸ்லாஸ், ராணிநல்லுச்சாமி, விளாங்குடி சித்தன், மார்க்கெட் மார்நாடு, இளைஞரணி கண்ணன்,சேகர், நூர்முகமது, புதூர்சந்திரன், டிமிட்டிராவ், பாத்திமா, பகுதி வட்டசெயலாளர்கள் ஆர்.துரைப்பாண்டி, கார்னர் பாஸ்கர், புத்தக்கடை குமரவேல், யமுனா,ஜெயக்குமார்,சவுந்தரராஜன், எம்.ஏ.நாசர்,திடீர்நகர் பாலா, ஜெயக்குமார், ஜீவாஆறுமுகம், பகுதி நிர்வாகிகள் வாழைமரம் போஸ்,ஜெயராமன், வினோத்குமார் மற்றும் முனிச்சாலை சரவணன், ஜாகீர், முத்துமுருகன், ஐ.டி.விங்க் அப்துல்காதர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் மதுரை மாநகர மாவட்ட அ.தி.மு.க.செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பேசியதாவது -

மதுரையில் அண்ணாவின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மூன்றாவது மாபெரும் பொதுக்கூட்டமானது இன்று நடைபெற்றது, இந்த நாட்டின் பொதுக்களத்தில் நிற்கும் உரிமையை மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் அண்ணா பெரியார் பெண்கள் பொது வாழ்க்கையில் வர வித்திட்டவர்கள் இவர்கள்தான். தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு மாற்றத்தை உருவாக்கியவர் அண்ணா. அண்ணா இருக்கும் வரை கலைஞரை முன்னிலைப்படுத்தவில்லை தாய் எப்படி அனைத்து பிள்ளைகளும் ஒரே மாதிரி வலப்பாரோ அதேபோன்றுதான் அண்ணா அனைவரையும் ஒன்றாக நினைத்தார்.பல தலைவர்களை உருவாக்கிய பெருமை அண்ணாவிற்கு உண்டு. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட காலத்திலும் ஆணுக்கு பெண் நிகர் என்ற சட்டத்தை கொண்டு வந்தார். தற்போது அரசியல் தலைவர்கள் நட்சத்திர விடுதிகளில் தங்கி பிரச்சாரம் செய்கிறார்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்கள். ஆனால் பட்டினியாக கடந்து தொண்டர் வீட்டில் தங்கி கட்சியை வளர்த்தவர் அண்ணா.தி.மு.க.வை வளர்த்தவர் எம்.ஜி.ஆர். தி.மு.க.விலிருந்து பிரிந்து வந்த பிறகு அ.தி.மு.க.வை உருவாக்கினார் இருப்பினும் அண்ணாவை நினைவு கூறும் வகையில் அ.தி.மு.க.வின் கொடியில் அண்ணாவின் திருவுருவ படத்தை பொறித்தார்.இறந்தும் இறைவனாக எம்ஜிஆர் இருக்கிறார் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.

அதிமுக காலத்தில் கொண்டுவரப்பட்ட பல திட்டங்கள் மூடு விழாக் கண்டுள்ளது. மதுரையில் இரண்டு அமைச்சர்கள் இருக்கிறார்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்றே தெரியவில்லை.தமிழகத்தில் அனைத்து பொருட்களும் விளையும் கடுமையாக உயர்ந்துள்ளது ஆட்சிக்கு வந்தவுடன் ஆயிரம் ரூபாய் கொடுத்து இருக்கலாம் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கொடுத்து இருக்கிறார்கள். இன்னும் ஆறு மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் இருக்கிறது அதற்காகத்தான் கொடுக்கிறார்கள். தி.மு.க.சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.தி.மு.க.ஆட்சிக்கு வந்தவுடன் மதுக்கடையில் மூடப்படும் மது ஆலைகள் மூடப்படும் என கனிமொழி தெரிவித்தார் ஆனால் மூடவில்லை.

வாக்குறுதிகள் 99 சதவீதம் நிறைவேற்றப்பட்டதாக கூறுகிறார் முதலமைச்சர். நாகப்பட்டினத்தில் மீனவர்கள் சுடப்பட்டு இருக்கிறார்கள் அவர்களை நலம் விசாரிக்கவில்லை.தி.மு.க. ஆட்சியை விரைவில் பொதுமக்கள் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான வாக்குகளை அ.தி.மு.க.வுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 1 week ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து