முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய ஆடவர் வாலிபால் போட்டி: முதல் வெற்றியை பதிவு செய்தது இந்திய அணி

செவ்வாய்க்கிழமை, 19 செப்டம்பர் 2023      உலகம்
volleyball-team 2023-09-19

Source: provided

ஹாங்சோவ் : ஆசிய விளையாட்டு போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது இந்திய ஆடவர் வாலிபால் அணி.

கம்போடியாவை...

ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் வருகிற 23ம் தேதி தொடங்குகின்றன. ஆனால் துவக்க விழா நடைபெறுவதற்கு முன்னதாகவே கால்பந்து, கிரிக்கெட், வாலிபால், பீச் வாலிபால் உள்ளிட்ட சில போட்டிகள் ஆரம்பமாகின்றன. நேற்று நடைபெற்ற வாலிபால் போட்டி ஒன்றில் இந்தியா-கம்போடியா அணிகள் மோதின. இதில் ஆரம்பம் முதலே அற்புதமாக விளையாடிய இந்திய அணி முதல் 3 செட்டுகளை கைப்பற்றி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 25-14, 25-13 மற்றும் 25-19 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று ஆசிய விளையாட்டு போட்டி தொடரை வெற்றியுடன் ஆரம்பித்து வைத்துள்ளது. 

சீனா வெற்றி...

ஆசியன் கேம்ஸ் கால்பந்து போட்டியில் இந்திய அணியை 5-1 என்ற செட் கணக்கில் சீன அணி வீழ்த்தியது. ஆட்டத்தின் முதல் பாதியில் 1-1 என சமநிலையில் இருந்த நிலையில் இரண்டாவது பாதியில் சீன அணி 4 கோல்களை அடித்து ஆதிக்கம் செலுத்தியது. இதனால், 5-1 என்ற கணக்கில் சீனா வென்றது. சீன அணியில் கியான்லோங் டோ இரண்டு கோல்களையும் கோ தியான்யி, வெய்ஜூன் டேய், மற்றும் ஹாவோ பங் தலா ஒரு கோலும் அடித்தனர். இந்திய அணி தரப்பில் முதல் பாதியில் ராகுல் கேபி ஒரு கோல் மட்டும் அடித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து