முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

21 மாதங்களுக்கு பிறகு மீண்டும் இந்திய ஒருநாள் அணியில் இடம்பிடித்த ரவிச்சந்திரன் அஸ்வின்

செவ்வாய்க்கிழமை, 19 செப்டம்பர் 2023      விளையாட்டு
Ashwin 1

Source: provided

மும்பை : 21 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் இந்திய ஒருநாள் அணியில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பிடித்துள்ளார்.

சுழல்பந்து வீரர்...

ஐ.பி.எல். 2009-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முதன்முதலாக அஸ்வின் தேர்வு செய்யப்பட்டார். பின்னர் இந்திய அணியில் ஒருநாள், டி20 போட்டிகளில் 2010இல் தேர்வானார். டெஸ்டில் 2011இல் களமிறங்கினார்.  சிஎஸ்கே அணியில் 6 ஆண்டுகள் இருந்த அஸ்வின் பல மறக்க முடியாத இன்னிங்ஸ் விளையாடியுள்ளார். இந்திய அணியில் சிறந்த சுழல்பந்து வீச்சாளராக திகழ்கிறார். சிறந்த ஐசிசி பௌலர், ஆல்ரவுண்டர் தரவரிசையில் முதலிரண்டு இடங்களை பிடித்து அசத்தியுள்ளார். 

புறக்கணிக்கப்பட்டு... 

94 டெஸ்டில் விளையாடியுள்ள அஸ்வின் 3,185 ரன்களும் 489 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இதில் 5 சதங்களும் 14 அரைசதங்களும் அடங்கும். 24 முறை 4 விக்கெட்டுகள், 34 முறை 5 விக்கெட்டுகள்,  8 முறை 10 விக்கெட்டுகள் என இதுமாதிரி பல சாதனைகளை படைத்துள்ளார் அஸ்வின். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஆசிய கோப்பை, உலகக் கோப்பை என அஸ்வின் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்தார். இந்நிலையில் ஆஸி. எதிரான ஒருநாள் தொடரில் அஸ்வின் தேர்வாகியுள்ளார். இதன் மூலம் அஸ்வின் 21 மாதங்களுக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் திரும்பவும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இருப்பது நல்லது...

இது குறித்து ரோஹித் சர்மா, “கிட்டதட்ட டெஸ்டில் 100 ஒருநாள் போட்டிகளில் 150 போட்டிகள் விளையாடியுள்ள அஸ்வின் மாதிரியான ஒரு ஆள் இருப்பது நல்லது. இது எல்லாம் கடந்த காலமாக இருந்தாலும் அவர் தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி வருகிறார். டிஎன்பிஎல்லும் விளையாடுகிறார். களத்தில் அவர் உடல் எப்படி இருக்கிறதென புரிந்து கொள்ள வேண்டும். ஆஸ்திரேலியாவுடனான போட்டியில் அவர் எப்படி பந்து வீசுகிறார் உடல்தகுதி எப்படியிருக்கிறதென பார்க்க ஒரு வாய்ப்பாக இந்தத் தேர்வு அமையும்” எனக் கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து