முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்? - சீதாராம் யெச்சூரி தகவல்

வெள்ளிக்கிழமை, 22 செப்டம்பர் 2023      இந்தியா
Sitaram-Yechury 2023-09-22

Source: provided

பாட்னா : இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர், பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு தேர்ந்தெடுக்கப்படுவார் என்று சீதாராம் யெச்சூரி கூறினார். 

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.கவை வீழ்த்துவதற்காக 28 எதிர்க்கட்சிகள் இணைந்து இண்டியா  கூட்டணியை அமைத்துள்ளன. ஆனால், மேற்கு வங்காளம், கேரளா ஆகிய மாநிலங்களில் இண்டியா கூட்டணியில் தங்கள் கட்சி இடம் பெறாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அறிவித்துள்ளது.  

இந்த நிலையில், பீகார் மாநிலம் பீகார்ஷெரீப் மாவட்டம் ராஜ்கிர் என்ற இடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகளிடையே அக்கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- 

பாராளுமன்ற தேர்தலுக்கான இண்டியா  கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் தொடர்பாக கூட்டணி கட்சிகளிடையே எந்த சர்ச்சையோ, கருத்து வேறுபாடோ இல்லை. பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு, பிரதமர் வேட்பாளர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதில் இண்டியா கூட்டணி தலைவர்கள் கருத்தொற்றுமையுடன் உள்ளனர். 

தேர்தல் முடிந்த பிறகு எதிர்க்கட்சி கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு முன்னுதாரணங்கள் இருக்கின்றன. தற்போதைய ஒரே இலக்கு பா.ஜ.கவை தோற்கடிப்பதுதான். எனவே, இந்த நேரத்தில், பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளை தீவிரமாக எழுப்ப வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து