முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சனாதன ஒழிப்பு மாநாடு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு : ஐகோர்ட்டை அணுகுமாறு மனுதாரருக்கு அறிவுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 22 செப்டம்பர் 2023      இந்தியா
Supreme-Court 2023-04-06

Source: provided

புதுடெல்லி : சனாதன ஒழிப்பு மாநாடு தொடர்பாக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் சனாதன மாநாட்டில் அமைச்சர்கள் பங்கேற்றது பற்றி தமிழக அரசு பதிலளிக்கவும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் சென்னை ஐகோர்ட்டை அணுகுமாறு மனுதாரருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். 

சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ஜெகநாத் சார்பில் வழக்கறிஞர் பாலாஜி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள ரிட் மனுவில்,  

சென்னையில் செப்டம்பர் 2-ம் தேதி சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இந்து மதம், சனாதன தர்மத்தை குறி வைத்து, தகாத முறையில் பேசி, அவமானப்படுத்தும் வகையில் நடத்தப்பட்டு உள்ளது. 

சனாதனத்தை டெங்கு மலேரியாவை போல ஒழிக்க வேண்டுமென தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு பங்கேற்றது அரசமைப்பு சாசனத்தின் 25,26 பிரிவுகள் மீறப்பட்டது, முரணானது என அறிவிக்க வேண்டும். 

சனாதன ஒழிப்பு மாநாட்டுக்கு தமிழீழ விடுதலை புலிகள் போன்ற பயங்கரவாத அமைப்பு நிதி வழங்கியதா என்பதை சி.பி.ஐ. விசாரிக்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும், சி.பி.ஐ.க்கும் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார்.  

இந்த மனு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அனிருதா போஸ், பேலா எம்.திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 

 அமைச்சர் ஒருவர் வெறுப்பு பேச்சை ஊக்குவிக்கிறார்; அவர் அரசின் பிரதிநிதி, தனிநபர் அல்ல என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. சனாதன சர்ச்சை விவகாரத்தில், தலையிட விரும்பவில்லை என்றும் இதில் ஐகோர்ட்டை ஏன் நாடக்கூடாது என மனுதாரருக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பி ஐகோர்ட்டை அணுகுமாறு அறிவுறுத்தினர். 

 அதனை தொடர்ந்து சனாதன ஒழிப்பு மாநாடு தொடர்பாக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் சனாதன மாநாட்டில் அமைச்சர்கள் பங்கேற்றது பற்றி தமிழக அரசு பதிலளிக்கவும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து