முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பூனை சண்டைக்கு கூப்பிட்டா புலி போகுமா?: சீறிய சீமான்

ஞாயிற்றுக்கிழமை, 24 செப்டம்பர் 2023      தமிழகம்
Seeman 2023 01 22

Source: provided

கோவை : நான் புலி, பூனை சண்டைக்கு கூப்பிட்டா புலி போகுமா? என வீரலட்சுமி சவால் குறித்த கேள்விக்கு நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பதில் அளித்துள்ளார். 

எனது கணவருடன் பாக்சிங்கில் வெற்றி பெற்று காட்டுமாறு சீமானுக்கு நடிகை விஜயலட்சுமி வழக்கில் ஆஜரான வீரலட்சுமி என்பவர் சவால் விடுத்து இருந்தார். இது குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பதில் அளித்து கூறியதாவது, 

நான் புலி; பூனை சண்டைக்கு கூப்பிட்டா புலி போகுமா? அல்லது போகாதா?  பாட்டு எழுதி புகழ் பெறுகிற புலவர்களும் உண்டு. அதில் குற்றம் கண்டுபிடித்து புகழ் பெறுகிற புலவரும் உண்டு. என்னை எதிர்ப்பவர்கள் எல்லாம் எனக்கு எதிரி கிடையாது. நான் யாரை எதிர்க்கிறேனோ அவர்கள் தான் எனக்கு எதிரி. விஜயலட்சுமியுடன் ஒப்பிட்டு பேசுவது உங்களுக்கு உங்களுக்கு சீரமம், எனக்கும் சீரமம் என்றார். 

மேலும் சீமான் கூறுகையில், நான் ஒரு தமிழ் தேசிய மகன்  தமிழ் நிலத்துக்காக தான் தேர்தலில் நிற்பேன். லோக்சபா தேர்தலுக்கு என் தம்பி தங்கைகளை தோல் மீது  ஏற்றி அவர்களை வழி அனுப்பினேன்.  இண்டியா கூட்டணியில் நான் இல்லை. அது ஒரு வேடிக்கையான கூட்டணி. 

மேற்கு வங்கத்தில் மம்தாவை காங்கிரஸ்,  காங்கிரஸ், கம்யூனிஸ்ட் எதிர்க்கிறது. தமிழகத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் ஒன்றாக இருக்கிறது.கேரளாவில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் எதிராக இருக்கிறது. பஞ்சாபில் காங்கிரஸ் எதிராக கெஜ்ரிவால் நிற்கிறார்.

அ.தி.மு.க. கொடியில் அண்ணாதுரை உள்ளார். அப்படி இருக்கும் போது அண்ணாமலை அண்ணாதுரையை விமர்சனம் செய்தது  தவறு. அண்ணாதுரை பற்றி விமர்சனம் செய்வதற்கு தி.மு.க. ஆர்.எஸ் பாரதி, முதல்வர் ஸ்டாலின், உதயநிதி கண்டனம் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகின்றனர். இவ்வாறு சீமான் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து