முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய விளையாட்டு போட்டி: அடுத்தடுத்து 2 வெள்ளி பதக்கங்களை வென்று இந்தியா அசத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 24 செப்டம்பர் 2023      விளையாட்டு
India-wins-2 2023-09-24

Source: provided

பெய்ஜிங் : ஒலிம்பிக்குக்கு அடுத்து மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஆசிய விளையாட்டு போட்டி 1951-ம் ஆண்டு முதல் அரங்கேறி வருகிறது. இந்த போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது.

கொரோனா காரணமாக ஒரு ஆண்டு தள்ளிவைக்கப்பட்ட 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நேற்று தொடங்கியது. இந்த திருவிழாவில் தடகளம், வில்வித்தை, நீச்சல், கைப்பந்து, கால்பந்து, கூடைப்பந்து, கிரிக்கெட், ஆக்கி, பேட்மிண்டன், வாள்சண்டை, குத்துச்சண்டை, டென்னிஸ், டேபிள் டென்னிஸ், பளுதூக்குதல், மல்யுத்தம், செஸ், ஜிம்னாஸ்டிக்ஸ், துப்பாக்கி சுடுதல் உள்பட 40 வகையாக விளையாட்டுகளில் மொத்தம் 481 பந்தயங்கள் நடைபெறுகிறது.

இதில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஜப்பான், மலேசியா, இலங்கை, இந்தோனேசியா, தென்கொரியா, வடகொரியா, ஆப்கானிஸ்தான், பக்ரைன், வங்காளதேசம், பூடான், ஈரான், கஜகஸ்தான், குவைத், சவுதி அரேபியா, சிங்கப்பூர் உள்பட 45 நாடுகளை சேர்ந்த 12,500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். ஆசிய விளையாட்டு தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் துப்பாக்கி சுடுதலில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் இந்திய அணி வெள்ளி பதக்கம் வென்றுள்ளது. அதேபோல், துடுப்பு படகு போட்டியில் இந்திய ஆண்கள் அணி வெள்ளி பதக்கம் வென்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து