முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பி.ஆர்.பாண்டியன் கைது: எடப்பாடி கண்டனம்

திங்கட்கிழமை, 25 செப்டம்பர் 2023      தமிழகம்
Edappadi 2020 11-16

Source: provided

சென்னை : சென்னையில் விவசாய சங்கத்தலைவர் பி.ஆர்.பாண்டியன் கைது செய்யப்பட்டதற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, 

விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை முன்னெடுத்தும், தண்ணீர் திறந்து விட வலியுறுத்தியும்  சென்னை மெரினா சாலையில் தேசிய கொடியை கையில் ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் மீது தாக்குதல் நடத்தியும் வலுக்கட்டாயப்படுத்தியும் கைது செய்திருக்கும் இந்த அரசை வன்மையாக கண்டிக்கிறேன். 

தனது உடல் பொருள் ஆவி அனைத்தையும் மக்களுக்காகவே அர்ப்பணித்து வரும் விவசாயிகள் மீது அடக்குமுறையை கையாள்வதை ஒருநாளும் ஏற்றுக் கொள்ள முடியாது என இந்த அரசை மீண்டும் ஒரு முறை கண்டிப்பதுடன், இனியும் விவசாய சங்கங்கள் மீது இத்தகைய அடக்குமுறையை கையாண்டால் இந்த அரசு கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கிறேன். இவ்வாறு அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து