முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லால் பகதூர் சாஸ்திரி பிறந்த நாள்: ஜனாதிபதி, பிரதமர் மரியாதை

திங்கட்கிழமை, 2 அக்டோபர் 2023      இந்தியா
Modi-1 2023 04 03

Source: provided

புதுடெல்லி : சுதந்திர போராட்ட வீரரும், நாட்டின் 2-வது ஜனாதிபதியுமான லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு டெல்லி விஜய்காட்டில் உள்ள லால் பகதூர் சாஸ்திரியின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரும் லால் பகதூர் சாஸ்திரியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். மேலும் அரசு சார்பில் பலரும் மரியாதை செலுத்தினர். 

நாட்டின் இரண்டாவது பிரதமரான லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் மரியாதை செலுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, 

லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்கிறேன். அவரது எளிமையும், தேசத்திற்கான அர்ப்பணிப்பும், ஜெய் ஜவான், ஜெய் கிசான் என்ற புகழ்பெற்ற முழக்கமும் இன்றும் எதிரொலிப்பதுடன், தலைமுறைகளுக்கும் உத்வேகம் அளிக்கிறது. 

இந்தியாவின் முன்னேற்றத்திற்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் சவாலான காலங்களில் அவரது தலைமைத்துவம் முதலியவை முன்மாதிரியாக உள்ளன. வலுவான இந்தியாவுக்கான அவரது தொலைநோக்குப் பார்வையை நனவாக்க நாம் எப்போதும் பாடுபடுவோம். இவ்வாறு அந்த பதிவில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து