முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஃ (அக்கு) – விமர்சனம்

திங்கட்கிழமை, 16 அக்டோபர் 2023      சினிமா
Aku-Review 2023-10-16

Source: provided

அம்பிகாபதி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் வி.ஸ்டாலின் இயக்கத்தில் பிரஜின் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ஃ(அக்கு). கர்மா ஒரு போதும் மன்னிக்காது என்ற கருவை வைத்து இப்படம் உருவாகியுள்ளது.படத்தின் தொடக்கத்தில் கதாநாயகன் பிரஜினின் காதலி காயத்ரி ரெமா கொலை செய்யப்படுகிறார். கொலைக்கான காரணம் என்ன என விசாரிப்பதற்குள் இன்னொரு கொலை, மீண்டும் இன்னொரு கொலை என மூன்று கொலை நடக்கிறது. இந்நிலையில் கொலைப்பழி மொத்தமும் பிரஜினின் மீது விழுகிறது.‘நடக்கும் கொலைகளுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை’ என்பதை பிரஜின் எடுத்துச் சொன்னாலும் போலீஸ் தரப்பில் நம்ப மறுப்பதால், ஓடி ஒளிய வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார். பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் மீதிக்கதை. திரைப்பட எடிட்டராக வரும் பிரஜன் அருமையான நடிப்பை வெளிப்படத்தி உள்ளார்.படத்தின் இயக்குனர் ஸ்டாலின் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார். கதையோட்டத்துக்கு தேவையான பின்னணி இசையை தந்திருக்கிறார் சதீஷ் செல்வம். மொத்தத்தில் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் படம் நன்றாக இருந்திருக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து