முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாட்டின் பொறுப்பு கவர்னராக ஆர்.வி.ஆர்லேகா் இன்று பதவியேற்பு

புதன்கிழமை, 11 மார்ச் 2026      தமிழகம்
RVR-Lake-2026-03-11

சென்னை, தமிழ்நாட்டின் பொறுப்பு கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.வி.ஆர்லேகா் இன்று பதவியேற்கவுள்ளார். அவருக்கு உயா்நீதி மன்றத் தலைமை நீதிபதி அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறாா். 

தமிழக கவர்னராக  இருந்த ஆர்.என். ரவி, மேற்கு வங்க கவர்னராக  நியமிக்கப்பட்டுள்ளாா். இதையடுத்து கேரள கவர்னர் ஆர்.வி. ஆர்லேகா் தமிழக கவர்னர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பாா் என கடந்த மாா்ச் 5-ம் தேதி ஜனாதிபதி திரெளபதி முர்மு உத்தரவிட்டாா். இதை முன்னிட்டு ஆா்.வி.ஆர்லேகா் நேற்று சென்னை வந்தார்.

தமிழக கவர்னராக  கூடுதல் பொறுப்பேற்கும் ஆர்.வி.ஆர்லேகா் இன்று பகல் 12 மணியளவில் பதவியேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயா்நீதி மன்றத் தலைமை நீதிபதி அவருக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறாா். இந்தப் பதவி ஏற்பு நிகழ்வு எளிமையாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே கடந்த நாலரை ஆண்டுகளாக தமிழக கவர்னராக  இருந்த ஆர்.என்.ரவி, தமிழக கவர்னர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு கொல்கத்தாவுக்கு செல்கிறார். அவரை கவர்னர் மாளிகை அதிகாரிகளும் ஊழியா்களும் வழியனுப்பி வைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து