முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வருகிற 13-ம் தேதி வரை மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏர் இந்தியா விமானங்கள் ரத்து

செவ்வாய்க்கிழமை, 10 மார்ச் 2026      இந்தியா
Air-India

புதுடெல்லி, மத்திய கிழக்கு நாடுகளுக்கு இயக்கப்படும் ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மார்ச் 13 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் படைகள் தாக்குதல் காரணமாக வளைகுடா நாடுகள் தங்களின் வான் வெளியை மூடிவிட்டதால், மத்திய கிழக்கு நாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்களின் சேவை மார்ச் 13 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படும் என்று ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

ஈரான் மீதான தாக்குதல் காரணமாக வான்வெளி மூடப்பட்டதால் வளைகுடா நாடுகளுக்கான விமானச் சேவையை பல்வேறு நாடுகளும் ரத்து செய்து வருகின்றன. அதுபோல, இந்தியாவிலிருந்து இயக்கப்படும் விமானங்களும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு வருகின்றன.

ஏர் இந்தியா நிறுவனம் கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி முதல் தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகள் வழியாக இயக்கப்படும் சர்வதேச விமான சேவையை ரத்து செய்தது வருகிறது. இந்த தற்காலிக ரத்து மார்ச் 10 வரை தொடரும் என ஏர் இந்தியா நிறுவனம் முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மார்ச் 13 ஆம் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

ரத்து செய்யப்பட்ட விமானங்களில் முன்பதிவு செய்திருந்த பயணிகள் எந்த கூடுதல் கட்டணமும் இல்லாமல் பயணத்தின் தேதியை மாற்றிக்கொள்ளலாம் என்றும் இல்லையெனில் பயணத்தை ரத்து செய்து செலுத்தி முழு பணத்தையும் திரும்பப்பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து