எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று கந்தசஷ்டி திருவிழாவையொட்டி சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 13-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து 5 நாட்கள் காலை மற்றும் மாலையில் யாக சாலை பூஜைகள் நடந்தன. விழா நாட்களில் தினமும் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானை அம்பாளுடன் தங்க சப்பரத்தில் சண்முக விலாச மண்டபத்திற்கு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
பின்னர் திருவாவடுதுறை ஆதீன கந்தசஷ்டி மண்டபத்தில் சுவாமிக்கும், அம்பாள்களுக்கும் மஞ்சள் பொடி, மா பொடி, இளநீர், தேன், பால், தயிர், பன்னீர், விபூதி, சந்தனம் உள்பட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.
கந்தசஷ்டி திருவிழாவின் 6-ம் நாளான நேற்று அதிகாலை ஒரு மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது.
தொடர்ந்து யாகசாலையில் நடந்த தீபாராதனைக்கு பின்னர், சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் சண்முக விசால மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு மகா தீபாராதனை நடந்தது. பின்னர் திருவாவடுதுறை ஆதீனம் கந்த சஷ்டி மண்டபத்தில் சுவாமி, அம்பாள்களுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது.
ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீவரர் கோவிலில் இருந்து சூரபத்மன் தனது படை வீரர்களுடன் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மாலை -2.45 மணிக்கு கோவில் கடற்கரைக்கு வந்து சேர்ந்தார். மாலை - 4.10 மணிக்கு, சுவாமி ஜெயந்தி நாதர் வண்ண மலர்களாலான மாலைகள் அணிந்து அலங்காரத்துடன் கையில் வேல் ஏந்தி, சூரபத்மனை வதம் செய்ய கடற்கரைக்கு புறப்பட்டார்.
முதலில் மாயையே உருவாக கொண்ட யானைமுகன் தனது பரிவாரங்களுடன், முருக பெருமானை நோக்கி போர் புரிய சுற்றி வந்து சுவாமிக்கு எதிரே வந்து நின்றான். மாலை 4.35மணிக்கு யானை முகம் கொண்ட தாரகாசூரனை, முருகப்பெருமான் வேல் கொண்டு வதம் செய்தார்.
அதன் பிறகு கன்மம் உருவம் கொண்ட சிங்கமுகாசூரன், அதேபோல் முருகனை வலம், இடமாக சுற்றி வந்து நேருக்கு நேர் போரிட தயாரானான். அவனையும் முருகப்பெருமான் தன் வேலால் வதம் செய்தார்.
சகோதரர்களை தொடர்ந்து ஆணவமே உருவான சூரபத்மன் தனது படை வீரர்களுடன் வேகமாக முருக பெருமானுடன் போர் புரிய வந்தான். முருகக் கடவுள் வேல் எடுத்து சூரபத்மனை சம்ஹாரம் செய்தார். அப்போது வானத்தில் கருடன் சுற்றி வட்டமிட்டது. கடற்கரையில் கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் எழுப்பிய வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா கோஷம் விண்ணை பிளந்தது.
இறுதியாக மாமரமும், சேவலுமாக உருமாறி வந்த சூரபத்மனை முருகப்பெருமான் சேவலும், மயிலுமாக மாற்றி ஆட்கொண்டார். மயிலை தனது வாகனமாகவும், சேவலை தனது கொடியாகவும் வைத்துக் கொண்டார்.
பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரையில் உள்ள சந்தோஷ மண்டபத்திற்கு சென்றார். அங்கு சினம் தணிந்த முருகனுக்கும், வள்ளி-தெய்வானை அம்பாளுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளி கிரி வீதி வலம் வந்து கோவில் உள்பிரகாரத்தில் உள்ள 108 மகா தேவர் சன்னதிக்கு சென்றார். அங்கு இருந்த கண்ணாடியில் தெரிந்த சுவாமியின் பிம்பத்திற்கு அபிஷேகம்(சாயாபிஷேகம்) நடந்தது.
பின்னர் விரதம் இருந்த பக்தர்களுக்கு யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட தகடுகள் வழங்கப்பட்டன. சூரசம்ஹாரம் நடந்ததும் பக்தர்கள் கடலில் புனித நீராடி பல மணி நேரம் வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் சூரசம்ஹாரத்தை காண கோவிலுக்கு வந்து இருந்தனர்.
கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு கோவிலில் பக்தர்களின் வசதிக்காக ஆங்காங்கே டி.வி.க்கள் வைக்கப்பட்டு இருந்தன. மேலும் சூரசம்ஹார விழாவை கூட்ட நெரிசல் இல்லாமல் பார்க்க பெரிய டிஜிட்டல் திரை கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்தன. வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்கப்பட்டன.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் விடப்பட்டு இருந்தன. இதே போன்று திருச்செந்தூர்- நெல்லைக்கு சிறப்பு ரயில் விடப்பட்டு இருந்தது. பக்தர்களின் பாதுகாப்பு கருதி தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
இதில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் இருந்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, துணை போலீஸ் சூப்பிரண்டு, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் என 2500-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
பக்தர்கள் கடலில் குளிக்கும் போது ஆழமான பகுதிக்கு செல்லாமல் இருக்கு கடலில் தடுப்பு மிதவைகள் போடப்பட்டு இருந்தன. மேலும் கடலில் படகுகளில் தீயனைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு இருந்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் மாவட்ட நிர்வாகமும், கோவில் பணியாளர்களும் செய்திருந்தனர்.
இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் முரளிதரன், மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி, சென்னை உயர்நீதமன்ற நீதிபதி ஆதி கேசவலு, மதுரை கிளை நீதிபதிகள் புகழேந்தி, பாலாஜி, தூத்துக்குடி மாவட்ட நீதிபதி செல்வம், மாவட்ட குற்றவியல் தலைமை நீதபதி செல்வக்குமார், திருச்செந்தூர் சார்பு நீதி மன்ற நீதிபதி வஷித் குமார், திருக்கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் அருள்முருகன், இணை ஆணையர் கார்த்திக், இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் ஜெயக்குமார், திருச்செ,ந்தூர் ஒன்றிய குழு தலைவர் செல்வி வடமலை பாண்டியன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட தலைவர் காமராசு நாடார், பா.ஜ.க. தூத்துக்குடி மாவட்ட பொதுச்செயலாளர் சிவமுருக ஆதித்தன், ஓட்டல் மணி அய்யர் ரமணி, விவேகா கன்ஸ்ட்ரக்சன் நாராயணன், வெங்கடேசன் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்,
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்று தி.மு.க. முப்பெரும் விழா: முதல்வர் மு.க.ஸ்டாலின் கரூர் வருகை
16 Sep 2025கரூர் : தி.மு.க.வின் முப்பெரும் விழா இன்று (புதன்கிழமை) கரூர் கோடங்கிபட்டியில் நடைபெற உள்ளது. விழாவில் முதல்வரும், தி.மு.க.
-
முதலில் கச்சா எண்ணெய், தற்போது சோளம்: இந்தியாவை அடிபணிய வைக்க அமெரிக்காவின் புதிய தந்திரம்
16 Sep 2025டெல்லி : அமெரிக்காவிடம் இருந்து மக்காச்சோளம் இறக்குமதி செய்ய இந்தியா மறுப்பு தெரிவித்தால் அமெரிக்க சந்தையை இந்தியா அணுகுவதை இழக்க நேரிடும் என அமெரிக்க வர்த்த செயலாளர் ஹ
-
மதுரையில் பயங்கரம்: கூலிப்படையை ஏவி தொழிலதிபர் கொலை
16 Sep 2025மதுரை : மதுரையில் கூலிப்படையை ஏவி தொழிலதிபர் கொலை செய்யப்பட்டதை அடுத்து பங்குதாரர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
தீபாவளி சிறப்பு ரயில்களுக்கு இன்று முன்பதிவு தொடக்கம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு
16 Sep 2025சென்னை, : தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக்கால சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று (செப். 17) தொடங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
தமிழகத்தில் இன்று தருமபுரி உள்ளிட்ட 28 மாவட்டங்களுக்கு 'மஞ்சள்' எச்சரிக்கை
16 Sep 2025சென்னை : தமிழகத்தில் இன்று ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 28 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் இரு நாள்களுக்கு இந்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்
-
ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில் புதிய மாற்றம் : அக்டோபர் 1 முதல் அமல்
16 Sep 2025டெல்லி : ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில் புதிய மாற்றம் அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வருகிறது.
-
உலகின் எந்த நாட்டில் இருந்தாலும் ஹமாஸ் தலைவா்களை தாக்குவோம் : இஸ்ரேல் பிரதமா் திட்டவட்டம்
16 Sep 2025ஜெருசலேம் : உலகின் ஹமாஸ் தலைவா்கள் எந்த நாட்டில் இருந்தாலும் தாக்குவோம் என்று இஸ்ரேல் பிரதமர் கூறியுள்ளார்.
-
உத்தரகாண்டில் மேகவெடிப்பு: நிலச்சரிவு சாலைகள் துண்டிப்பு
16 Sep 2025உத்தரகாண்ட் : உத்தரகாண்டில் மேகவெடிப்பு காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டதில் சாலைகள் துண்டிக்கப்பட்டது 5 பேர் மாயமாகி உள்ளனர்.
-
ஆதீனம் விவகாரத்தில் போலீசார் பிரச்சினையை பெரிதாக்கி விட்டனர்: மதுரை ஐகோர்ட் கருத்து
16 Sep 2025சென்னை : மதுரை ஆதீனம் விவகாரத்தில் போலீசார் பிரச்சினையை பெரிதாக்கி விட்டனர் என்று மதுரை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: முதல் அணியாக சூப்பர் 4 சுற்றை உறுதி செய்தது இந்தியா
16 Sep 2025அபுதாபி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் அணியாக சூப்பர் 4 சுற்றை உறுதி செய்துள்ளது இந்திய அணி.
8 அணிகள்...
-
படுக்கை, தலையணை வேண்டும்: சிறையில் இருக்கும் நடிகர் தர்ஷன் மனு
16 Sep 2025பெங்களூரு : சிறையில் படுக்கை, தலையணை கேட்டு நடிகர் தர்ஷன் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
இன்று முதல் திருச்சியில்-டெல்லி நேரடி விமான சேவை தொடக்கம்
16 Sep 2025திருச்சி : திருச்சியில் இருந்து டெல்லிக்கு நேரடி விமான சேவை இன்று முதல் தொடங்கப்படவுள்ளது.
-
அதிபர் ட்ரம்ப் இங்கிலாந்து பயணம்
16 Sep 2025லண்டன் : இங்கிலாந்துக்கு 3 நாள் பயணமாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புறப்படுகிறார்.
-
தலைநகர் டெல்லியில் துணை ஜனாதிபதியை நேரில் சந்தித்து இ.பி.எஸ். வாழ்த்து
16 Sep 2025புதுடெல்லி : டெல்லி சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி, அங்கு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
-
தமிழக முழு நேர டி.ஜி.பி. தோ்வு செய்ய செப்.26 டெல்லியில் யு.பி.எஸ்.சி. கூட்டம்
16 Sep 2025சென்னை : தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் மற்றும் மாநில காவல்படைத் தலைவா் பதவிக்கு முழு நேர ஐ.பி.எஸ்.
-
திருவள்ளுர், நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ரூ. 28.33 கோடி மதிப்பீட்டில் 4 புதிய தொழிற்பேட்டைகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
16 Sep 2025சென்னை : திருவள்ளுர், திருநெல்வேலி, திருவாரூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் சுமார் 5,400 பேர் வேலைவாய்ப்பு பெற்றிடும், ரூ.
-
ரயில் டிக்கெட் முன்பதிவு: ஆதாா் பயனா்களுக்கு முன்னுரிமை
16 Sep 2025புதுதில்லி : ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் பயனர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
-
வைஷாலிக்கு முதல்வர் வாழ்த்து
16 Sep 2025ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் தொடரை வென்று தமிழகத்தைச் சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி (24) அசத்தியுள்ளார்.
-
ஆசிய கோப்பை கிரிக்கெட்: இலங்கை, யு.ஏ.இ. வெற்றி
16 Sep 2025அபுதாபி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் திங்கட்கிழமை நடந்த 2 போட்டிகளில் இலங்கை, யு.ஏ.இ. வெற்றிப்பெற்றன. அடுத்த சுற்று வாய்பை இழந்தது ஓமன் வெளியேறியது.
-
இந்தியா-அமெரிக்கா இடையே டெல்லியில் வா்த்தகப் பேச்சு
16 Sep 2025புதுதில்லி : இந்தியா-அமெரிக்கா இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை நேற்று டெல்லியில் மீண்டும் நடைபெற்றது.
-
காசா மீதான ராணுவ விரிவாக்கம்: பாலஸ்தீனர்களுக்கு இஸ்ரேல் உத்தரவு
16 Sep 2025காசா : காசா மீதான ராணுவ விரிவாக்கம் தொடர்பாக பாலஸ்தீனர்கள் வெளியேற இஸ்ரேல் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
-
2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்: தமிழக பா.ஜ.க. முக்கிய ஆலோசனை
16 Sep 2025சென்னை, வருகிற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக பா.ஜ.க. தலைவர்கள் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர்.
-
வடகொரியாவில் ஆங்கில சொற்களை பயன்படுத்த தடை
16 Sep 2025வடகொரியா, ஆங்கில சொற்களை உச்சரிக்க அந்த நாட்டு அரசு தடைவிதித்துள்ளது.
-
வடகொரியாவில் ஆங்கில சொற்களை பயன்படுத்த தடை
16 Sep 2025வடகொரியா : ஆங்கில சொற்களை உச்சரிக்க அந்த நாட்டு அரசு தடைவிதித்துள்ளது.
-
அ.தி.மு.க.வை யாராலும் ஒன்று செய்ய முடியாது : சென்னை பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். ஆவேசம்
16 Sep 2025சென்னை : அ.தி.மு.க.வை யாராலும் ஒன்று செய்ய முடியாது என்று தெரிவித்துள்ள அ.தி.மு.க.