முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவின் நலனுக்கு எது தேவையோ அதை செய்வேன்: அதிபர் டெனால்ட் ட்ரம்ப் அதிரடி முடிவு

திங்கட்கிழமை, 19 ஜனவரி 2026      உலகம்
Trump 2024-12-21

நியூயார்க், இனி அமைதியைப் பற்றி மட்டுமே சிந்திக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அமெரிக்காவின் நலனுக்கு எது தேவையோ அதைச் செய்வதில் கவனம் செலுத்துவேன் என்று நார்வே பிரதமருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் உள்பட 8 போர்களை நிறுத்தியதற்காக தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இருப்பினும், 2025 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை வெனிசூலா நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்பட்டது. இதனால் டிரம்ப் அதிருப்தி அடைந்த நிலையில், தான் பெற்ற நோபல் பரிசை டிரம்ப்புக்கு வழங்குவதாக மரியா கொரினா அறிவித்தார்.

தொடர்ந்து, வெள்ளை மாளிகையில் கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு டிரம்ப்பிடம் தனது நோபல் பரிசை மரியா கொரினா வழங்கினார். இந்த நிலையில், நார்வே பிரதமர் ஜோனஸ் கார் ஸ்டோருக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடிதம் ஒன்றை எழுதியுள்ளர். அதில் தெரிவித்திருப்பதாவது: “உலகளவில் 8 போர்களை நிறுத்தியும் உங்கள் நாடு (நார்வே) எனக்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளது.

இனிமேல் அமைதியைப் பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டும் என்ற கடமை எனக்கு இல்லை. அது எப்போதும் எனக்கு முதன்மையாகவே இருக்கும், ஆனால், அமெரிக்காவின் நலனுக்கு எது தேவையோ அதைச் செய்வதில் கவனம் செலுத்துவேன். கிரீன்லாந்தை ரஷ்யா மற்றும் சீனாவிடமிருந்து டென்மார்க்கால் பாதுகாக்க முடியாது. அந்த நிலத்துக்கு உரிமை கொண்டாட எழுத்துப்பூர்வ ஆவணங்கள் எதுவும் டென்மார்க்கிடம் இல்லை. பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு டென்மார்க்கின் படகு அங்கு கரை சேர்ந்ததை மட்டுமே காரணமாக சொல்கிறார்கள். ஆனால், அமெரிக்க படகுகளும் அங்கு கரை சேர்ந்துள்ளது.

நேட்டோ நிறுவப்பட்டதில் இருந்து அனைவரைவிடவும் நான் அதிகமாக செய்துள்ளேன். தற்போது அமெரிக்காவுக்கு நேட்டோ எதாவது செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. கிரீன்லாந்து மீது முழுமையான கட்டுப்பாடு எங்களுக்கு இருந்தால்தான் உலகம் பாதுகாப்பாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து