முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெம்மேலியில் புதிதாக அமையவுள்ள 'மாமல்லன்' ஏரி மூலம் 13 லட்சம் மக்களுக்கு குடிநீர் வழங்க முடியும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

திங்கட்கிழமை, 19 ஜனவரி 2026      தமிழகம்
CM-1-2026-01-19

மாமல்லபுரம், 69 ஏரிகளில் இருந்து வரும் உபரிநீரை சேமித்து மாமல்லபுரம் அருகே நெம்மேலியில் புதிதாக அமையவுள்ள மாமல்லன் ஏரி மூலம் 13 லட்சம் மக்களுக்கு குடிநீர் வழங்க முடியும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

மாமல்லபுரம் அருகே நெம்மேலியில் ரூ.342.6 கோடியில் நீர்த்தேக்கம் அமைக்க முதல்வர் ஸ்டாலின் திங்கள்கிழமை அடிக்கல் நாட்டினார். 5,161 ஏக்கர் பரப்பளவில் 1.6 டி.எம்.சி. வெள்ளநீரை சேமிக்கும் வகையில் நீர்த்தேக்கம் அமைக்கப்படுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டிய 6-வது நீர்த்தேக்க ஏரிக்கு மாமல்லன் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பக்கிங்காம் கால்வாயின் உப வடிநிலத்தில் புதிய நீர்த்தேக்கம் அமைக்க நீர்வளத் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. ஆட்சியில் அணைகளே கட்டப்படவில்லை என அவதூறு பரப்புவார்கள், அது உண்மையில்லை. 43 அணைகள் கட்டப்பட்டுள்ளன. தொடர்ந்து தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்ட அணைகளின் விவரங்களை அவர் பட்டியலிட்டார்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின் கடந்த 5 ஆண்டுகளாக மேட்டூர் அணை முழுவதுமாக நிரம்பி வருகிறது. காவிரிப் படுகை பகுதிகளில் ரூ.459 கோடி மதிப்பில் தூர்வாரும் பணிகள் நடைபெற்றுள்ளன. நீர்நிலைகள் தூர்வாரப்பட்டதால் கடைமடை வரை உள்ள விவசாயிகள் பயனடைந்துள்ளனர். தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்பு திட்டத்தை சாத்தியமாக்கியது தி.மு.க. அரசு. 69 ஏரிகளில் இருந்து வரும் உபரிநீரை சேமித்து இந்த மாமல்லன் ஏரி அமையவுள்ளது. 34 கி.மீ. நீள கரையுடன் மாமல்லன் நீர்த்தேக்கம் அமைக்கப்படவுள்ளது. புதிதாக அமையவுள்ள மாமல்லன் ஏரி மூலம் 13 லட்சம் மக்களுக்கு குடிநீர் வழங்க முடியும்.

ஏரியைச் சுற்றி வசிக்கும் மக்களுக்கு இதில் மீன்பிடிக்க மீன்பிடி உரிமம் வழங்கப்படும். சென்னையின் புதிய அடையாளங்களாக உருவெடுத்துள்ள பகுதிகளுக்கு குடிநீர் வழங்கவே இந்த நீர்த்தேக்கம். நிதி மேலாண்மைபோல் நீர் மேலாண்மையும் அவசியம் என்பதை உணர்ந்து அரசு செயல்படுகிறது. இவ்வாறு குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து