முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலை மண்டல பூஜை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று தொடக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 19 நவம்பர் 2023      ஆன்மிகம்
Sabarimala 2023-11-17

Source: provided

திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகிற டிசம்பர் 27-ம் தேதி நடைபெறும் மண்டல பூஜை தின தரிசனத்திற்கான முன்பதிவு இன்று (20-ம் தேதி) தொடங்குகிறது என தேவஸ்தான தலைவர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 16-ம் தேதி திறக்கப்பட்டது. முதல் நாளில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 

முன்பதிவு செய்ய முடியாத பக்தர்கள் வசதிக்காக நிலக்கல்லில் உடனடி தரிசன முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 13 மையங்கள் அமைக்கப்பட்ட போதிலும் அனைத்து மையங்களிலும் முன்பதிவுக்கு பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

3-வது நாளான நேற்று முன்தினம் ஒரே நாளில் 45 ஆயிரம் பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்தனர். இந்த நிலையில் வருகிற டிசம்பர் 27-ம் தேதி நடைபெறும் மண்டல பூஜை தின தரிசனத்திற்கான முன்பதிவு இன்று (20-ம் தேதி) தொடங்குகிறது என தேவஸ்தான தலைவர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். வயதானவர்கள் மற்றும் சிறுவர், சிறுமிகளுக்கு சிறப்பு தரிசன வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து