முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூட்டுறவு துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கிடங்குகள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

திங்கட்கிழமை, 20 நவம்பர் 2023      தமிழகம்
CM-2 2023-11-21

சென்னை, சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்வர் மு.க. ஸ்டாலின், கூட்டுறவுத் துறை சார்பில் 23.35 கோடி ரூபாய் செலவில்  திருச்செங்கோடு,  ஈரோடு,  இராசிபுரம்,  பெருந்துறை ஆகிய இடங்களிலுள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களில் கட்டப்பட்டுள்ள கிடங்குகள், தானியங்கி வகைப்படுத்தும் மற்றும் தரப்படுத்தும் இயந்திரங்களுடன் கூடிய ஏலகளங்கள் மற்றும் ஆய்வுக்கூடம், சிந்தாதிரிப்பேட்டை மற்றும் தென்மேல்பாக்கம் நகர கூட்டுறவுக் கடன் சங்கங்களில் கட்டப்பட்டுள்ள புதிய சங்கக் கட்டிடம் மற்றும் திருமண மண்டபம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களில், விவசாயிகள் தங்களது விளைப்பொருட்களை விரைவாகவும், எளிதாகவும் சரியான எடையில், நியாயமான விலையில் விற்பனை செய்ய ஏதுவாக மின்னணு வர்த்தகத்திற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திடும் வகையிலும், சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள்  பயன்பெறும் வகையிலும், திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் 3.26 கோடி ரூபாய் செலவில் 500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிடங்கு, தானியங்கி வகைப்படுத்தும் மற்றும் தரப்படுத்தும் இயந்திரங்களுடன் கூடிய ஏலகளம்,  ஈரோடு  வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் 6.93 கோடி ரூபாய் செலவில் 2,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிடங்கு, தானியங்கி வகைப்படுத்தும் மற்றும் தரப்படுத்தும் இயந்திரங்களுடன் கூடிய ஏலகளம் மற்றும் ஆய்வுக்கூடம்,  இராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் 3.26 கோடி ரூபாய் செலவில் 500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிடங்கு, தானியங்கி வகைப்படுத்தும் மற்றும் தரப்படுத்தும் இயந்திரங்களுடன் கூடிய ஏலகளம், பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் 5.63 கோடி ரூபாய் மதிப்பில் 2,000 மற்றும் 500 மெட்ரிக் டன்  கொள்ளளவு கொண்ட இரு கிடங்குகள் மற்றும் ஏலகளம், 

நகர்வாழ் அடித்தட்டு மக்களின் பொருளாதார தேவையை பூர்த்தி செய்ய ஏதுவாக, சிந்தாதிரிப்பேட்டை நகர கூட்டுறவுக் கடன் சங்கத்தில் 2,306 சதுர அடி பரப்பளவில் 75 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடம்,   பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மறைமலைநகரில், தென்மேல்பாக்கம் நகர கூட்டுறவுக் கடன் சங்கத்தில் 16,000  சதுர அடி பரப்பளவில் 3.52 கோடி ரூபாய் செலவில் சங்கத்தின் சொந்த நிதியில் கட்டப்பட்டுள்ள கூட்டுறவு திருமண மண்டபம் என மொத்தம் 23.35 கோடி ரூபாய் செலவில் கூட்டுறவுத் துறை கட்டிடங்களை முதல்வர் திறந்து வைத்தார்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 1 week ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து