முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை துறைமுகத்தில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை அமைக்கிறது சீனா

செவ்வாய்க்கிழமை, 28 நவம்பர் 2023      உலகம்
China-2023-11-28

கொழும்பு, இலங்கை துறைமுகத்தில் சீனா பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை ஒன்றை அமைக்கவுள்ளது. இதற்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

சீனாவின் எரிசக்தி நிறுவனமான சினோபெக் நிறுவனத்திற்கு ரூ. 37 ஆயிரம் கோடி மதிப்பிலான புதிய பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலையை ஹம்பன்தோடா துறைமுகத்தில் நிறுவ இலங்கை அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இதை இலங்கை மந்திரி காஞ்சனா விஜே சேகரா தெரிவித்தார்.

சீன நிறுவனத்தின் இந்த பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை இலங்கையில் மிகப் பெரிய வெளிநாட்டு நேரடி முதலீடு ஆகும். இந்த சுத்திகரிப்பு நிலையத்துடன், அதனுடன் தொடர்புடைய தயாரிப்புகள் மற்றும் பயிற்சி மையமும் கூடுதலாக அமைக்கப்பட உள்ளது. 

ஹம்பன்தோடா துறைமுகம் இலங்கையின் 2-வது பெரிய துறைமுகம் ஆகும். இந்த துறைமுகம் 2010-ம் ஆண்டு திறக்கப்பட்டது. 2017-ம் ஆண்டு முதல் சீன வர்த்தக துறைமுகங்களின் கூட்டு முயற்சியின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. 

இந்த துறைமுக கட்டுமானத்துக்கு சீனாவின் எக்சிம் வங்கி கடன் அளித்துள்ளது. தற்போது இங்கு சீனா மிகப் பெரிய முதலீட்டை செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 5 days ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 1 day ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து