முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மார்க் ஆண்டனி பட விவகாரம்: மும்பை சி.பி.ஐ. அலுவலகத்தில் நடிகர் விஷால் ஆஜர்

செவ்வாய்க்கிழமை, 28 நவம்பர் 2023      சினிமா
Vishal

மும்பை, மார்க் ஆண்டனி படத்திற்காக சென்சார் அதிகாரிகள் லஞ்சம் பெற்ற வழக்கில் நடிகர் விஷால் மும்பை சி.பி.ஐ. அலுவலகத்தில் நேற்று ஆஜரானார்.

விஷால் நடிப்பில் செப்டம்பர் 15-ம் தேதி வெளியான மார்க் ஆண்டனி படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்த இப்படம்,  இந்தி மொழியில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. 

இதனிடையே, மகராஷ்டிரத்தில் இப்படத்தின் டப்பிங் மற்றும் திரையிடலுக்காக அதிகாரிகள் தன்னிடம் ரூ. 6.5 லட்சம் லஞ்சம் கேட்டதாகவும், படம் வெளியாக வேண்டும் என்பதால் இரண்டு பரிவர்த்தனைகளாகக் கேட்ட தொகையைக் கொடுத்ததாகவும் விஷால் தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில் திரைப்பட தணிக்கை அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக நடிகர் விஷால் கூறிய புகாரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தெரிவித்திருந்தது.  லஞ்சம் பெற்ற திரைப்பட தணிக்கைத் துறை அதிகாரிகள் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவும் செய்தது.

இந்த நிலையில், நடிகர் விஷால் மற்றும் அவரின் மேலாளர் ஹரி கிருஷ்ணன் ஆகியோர் சி.பி.ஐ. விசாரணைக்காக  மும்பை சி.பி.ஐ. அலுவலகத்தில் நேற்று ஆஜராகினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து