முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவை பிரபல நகைக்கடையில் 20 கிலோ தங்கம் கொள்ளை: 5 தனிப்படைகள் அமைப்பு

செவ்வாய்க்கிழமை, 28 நவம்பர் 2023      தமிழகம்
gold 2023 01 26

கோவை, கோவையில் உள்ள பிரபல நகைக்கடையில் 20 கிலோ மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் குறித்து 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

கோவை 100 அடி ரோட்டில் உள்ள பிரபல  நகைக்கடையில் ஏராளமான பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல பணியாளர்கள் அனைவரும் பணி முடிந்து கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றனர். நேற்று காலை மீண்டும் கடைக்கு வந்தனர். 

ஒவ்வொரு நாளும், கடையில் எவ்வளவு நகைகள் உள்ளன என்பதை பார்த்து விட்டே வியாபாரத்தை தொடங்குவது வழக்கம்.அதன்படி நேற்று காலையும் பணிக்கு வந்த ஊழியர்கள் தங்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட இடங்களில் நகைகளை ஆய்வு செய்தனர். அப்போது பல கிலோ நகைகள் மாயமாகி இருந்தது.

இதை பார்த்ததும் அதிர்ச்சியான ஊழியர்கள் சம்பவம் குறித்து மேல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்களும் விரைந்து வந்து பார்த்தனர். பின்னர் இதுகுறித்து காட்டூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர். 

நகைகள் எப்படி கொள்ளை போனது என்பது குறித்து கடை முழுவதும் ஆய்வு செய்தனர். அப்போது கார் பார்க்கிங் பகுதிக்கு செல்லக் கூடிய கதவு திறந்து கிடந்தது. இந்த கதவு எப்போதும் மூடப்பட்டிருக்கும். ஆனால் நேற்று கதவு திறந்திருந்ததால் ஊழியர்களும் அதிர்ச்சி அடைந்தனர். 

இதனால் நள்ளிரவு நேரத்தில் புகுந்த கொள்ளையர்கள் முன்பக்கம் காவலர்கள் பணியில் இருப்பார்கள் என்பதால், பின்பக்கம் உள்ள கார்பார்க்கிங் பகுதிக்கு சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து நகைக்கடைக்கு செல்லக் கூடிய படியில் மேலே ஏறி சென்று நகைகளை கொள்ளையடித்து விட்டு, மீண்டும் அதே பகுதி வழியாக கீழே இறங்கி வந்து தப்பி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இந்த நகைக்கடையில் 20 கிலோ மதிப்பிலான நகைகள் கொள்ளை போயிருக்கலாம் என தெரிகிறது. இருந்த போதும் மேலாளர் வந்து பார்த்த பின்பே எவ்வளவு நகைகள் கொள்ளை போனது என்பது தெரியவரும். தொடர்ந்து போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

நகைக்கடையில் கட்டிட பணி நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த பணிக்கு செல்வது போல் 3 பேர் சென்று இந்த துணிகர செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஏசி வெண்டிலேட்டர் உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அந்த வழியாக கொள்ளையர்கள் சென்ற விவரமும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கோவை நகைக்கடை கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகளை அமைக்கப்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து