முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவில் பரவும் தொற்று எதிரொலி: கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் : அனைத்து மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

புதன்கிழமை, 29 நவம்பர் 2023      இந்தியா
Central-government 2021 12-

Source: provided

புதுடில்லி : சீனாவில் பரவும் தொற்று காரணமாக நாட்டில் கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரித்துள்ளது.

அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் ஒன்றை எழுதியது. அந்த கடிதத்தில், சீனாவில் பரவி வரும் இன்ப்ளூயன்சா போன்ற உடல்நலக்குறைபாடு மற்றும் சுவாச தொற்று அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக குழந்தைகளிடம் சுவாச பிரச்னைகளை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. சீனாவில் பொது சுகாதார நெருக்கடி நிலை உருவாகி உள்ளது. இதனை உணர்ந்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட வேண்டும்.

பொது சுகாதார உள்கட்டமைப்பு வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். குறிப்பாக மருந்துகள், ஆக்ஸிஜன் உள்ளிட்டவற்றை போதுமான அளவில் வைத்திருக்க வேண்டும். சுவாச பிரச்னைகளுக்கு ஆளாவோரை கண்டறிந்து தேவையான சிகிச்சைகளை அளிக்க மாவட்ட மற்றும் மாநில கண்காணிப்பு குழுக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனக்கூறப்பட்டு உள்ளது. இதனையடுத்து, தமிழகம், கர்நாடகா, ராஜஸ்தான், உத்தரகண்ட், குஜராத் , ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்கள் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளதுடன், மாவட்ட நிர்வாகங்களை உஷார் நிலையில் இருக்கும்படி சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் அறிவுறுத்தி உள்ளன.

கர்நாடக மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பருவகால காய்ச்சல் என்பது ஒரு தொற்று நோயாகும். இது பொதுவாக ஐந்து முதல் ஏழு நாட்கள் நீடிக்கும். இதனால், குறைவான இறப்பு விகிதங்களே உள்ளன என அறியப்படுகிறது. இருப்பினும், குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் உள்ளிட்டோருக்கும் ஸ்டீராய்டுகள் போன்ற நீண்டகால மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்வோருக்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும். இதனால், காய்ச்சல், குளிர், உடல்சோர்வு, பசியின்மை, குமட்டல் உள்ளிட்ட அறிகுறிகள் காணப்படும். அதிக பாதிப்பு நிலையில் உள்ளவர்களுக்கு 3 வாரங்கள் வரை வறட்டு இருமலும் காணப்படும் எனக்கூறப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் கூறுகையில், தற்போது நிலைமை கவலைக்கிடமாக இ ல்லை. ஆனால், மருத்துவ ஊழியர்கள் மாநிலம் முழுவதும் கண்காணிப்புடன் செயல்பட வேண்டும். மேலும் தொற்று நோய்களை தடுக்க முழு விழிப்புடன் பணியாற்ற வேண்டும் எனக்கூறியுள்ளார்.

உத்தரகண்ட் மாநில சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் , குழந்தைகளுக்கு ஏற்படும் நிமோனியா மற்றும் காய்ச்சல் அறிகுறிகளை கண்காணிக்குமாறு மருத்துவக் குழுக்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. குஜராத்தில் அனைத்து மருத்துவமனைகளும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தமிழகம் பொதுசுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநர் , மாநிலத்தில் சுவாச நோய்களுக்கான கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். மேலும் குழந்தைகளுக்கு நிமோனியா பாதிப்பு குறித்த தகவல் ஏதும் இல்லை எனவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தயார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஹரியானாவில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் வழக்கத்திற்கு மாறாக சுவாச பிரச்னைகளுடன் வருவோர் குறித்து தகவல் தெரிவிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து