முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் சந்திரபாபு நாயுடு சாமி தரிசனம் : ஏழுமலையான் காப்பாற்றுவார் என பேட்டி

வெள்ளிக்கிழமை, 1 டிசம்பர் 2023      இந்தியா
Chandrababu 2023-12-01

Source: provided

திருப்பதி : திருப்பதி  கோவிலில் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு சாமி தரிசனம் செய்தார். அப்போது அவர், தன்னை ஏழுமலையான் காப்பாற்றுவார் என தெரிவித்தார்.  

ஆந்திர முன்னாள் முதல்வரும்,  தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு நேற்று முன்தினம் தனது மனைவி புவனேஸ்வரியுடன் திருப்பதிக்கு சென்றார். அவருக்கு தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் திருப்பதி மலைக்கு சென்ற சந்திரபாபு நாயுடு அங்குள்ள விருந்தினர் மாளிகையில் இரவு தங்கினார். நேற்று  காலை வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் வைகுண்ட வாசல் வழியாக ஏழுமலையானை தரிசனம் செய்தார். 

தரிசனம் முடிந்து வெளியே வந்த சந்திரபாபு நாயுடு பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 

இந்தியாவை உலகின் நம்பர் ஒன் ஆக்குவதும், தெலுங்கு மக்களை முதலிடம் பிடிக்க வைப்பதுமே எனது முதன்மையான நோக்கம். எப்போதுமே அதுதான் என் கனவாக இருந்து வருகிறது. எனது 45 வருட அரசியல் வாழ்க்கையில் அதற்காகத்தான் வேலை செய்திருக்கிறேன். 

மற்ற நாடுகளின் முன்னேற்றங்களைப் பார்த்து அவதானிப்பதும், அவர்களின் தொழில்நுட்பங்களை மாநில மக்களின் நன்மைக்காகவும் முன்னேற்றத்துக்காவும் பயன்படுத்துவதே எனது ஆர்வமாக இருந்து வந்திருக்கிறது என்றார்.

இன்னும் சில கோயில்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளேன். பகவான் வெங்கடேஷ்வரர் எங்களின் குலதெய்வம். அதனால்தான் நான் இந்த மலைக்கோயிலுக்கு செல்வதற்கு முன்னுரிமை அளித்தேன். என் வாழ்க்கையில் எந்த ஒரு முக்கியமான விஷயங்கள் நடந்தாலும் வெங்கடேஷ்வரனின் ஆசிர்வாதத்தை பெறுவது எனது வழக்கம்.

நான் இந்த மலைக்கோயில் அடிவாரத்தில் உள்ள கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன். நான் அலிபிரி குண்டுவெடிப்பில் உயிர் பிழைத்ததே இந்த வெங்கடேஷ்வரனின் ஆசிர்வாதம் தான். 

ஏழுமலையான் என்னை காப்பாற்றுவார். தற்போது என் வாழ்வில் ஏற்பட்ட சிக்கல்களையும், கஷ்டங்களையும் அவரின் ஆசிர்வாதத்தால் நான் கடந்து வந்தேன். இந்த இக்கட்டான நேரத்தில் என்மீது நம்பிக்கை வைத்த மாநில மக்களுக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து