முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மசோதா விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் தீர்வு காண முதல்வரை அழைத்து பேசி தீர்வு காணுங்கள்: தமிழ்நாடு கவர்னருக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 1 டிசம்பர் 2023      இந்தியா
Supreme-Court 2023-04-06

புதுடெல்லி, சட்டத்தை செயலிழக்க செய்யவோ, முடக்கவோ கவர்னருக்கு அதிகாரம் இல்லை. 'கவர்னர் - முதல்வர் இடையே பல்வேறு விவகாரங்களுக்கு தீர்வு காண வேண்டியுள்ளது. எனவே, முதல்வரை கவர்னர் அழைத்து பேசி தீர்வுகாண வேண்டும்; இல்லையெனில் உத்தரவு பிறப்பிக்க நேரிடும்' என தமிழக கவர்னருக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது.

தமிழக சட்டசபையில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக பல்வேறு சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டன. ஆனால், அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை. சட்ட மசோதாக்களுக்கு அனுமதியளிப்பதற்கு கவர்னருக்கு கால நிர்ணயம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது.

இந்த வழக்கு நேற்று (டிச.,1) விசாரணைக்கு வந்தது. வாதத்தின்போது நீதிபதிகள் கூறியதாவது.,

சட்டத்தை செயலிழக்க செய்யவோ, முடக்கவோ கவர்னருக்கு அதிகாரம் இல்லை. தற்போதைய முட்டுக்கட்டையை கவர்னர் தரப்புதான் தீர்க்க வேண்டும் என விரும்புகிறோம். கவர்னர் - முதல்வர் இடையே பல்வேறு விவகாரங்களுக்கு தீர்வு காண வேண்டியுள்ளது. எனவே, முதல்வரை கவர்னர் அழைத்து பேசி தீர்வுகாண வேண்டும்; இல்லையெனில் உத்தரவு பிறப்பிக்க நேரிடும். ஒருவேளை கவர்னர் முதல்வரை அழைத்து பேசி தீர்வுகாண முயற்சித்தால் அதனை நாங்கள் வரவேற்போம்.

கவர்னர் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கலாம், அளிக்காமல் வைக்கலாம் அல்லது ஜனாதிபதிக்கு அனுப்பலாம். முதல்முறை மசோதா அனுப்பப்பட்டபோதே ஜனாதிபதிக்கு அனுப்பி இருக்கலாமே. ஒரு முறை திருப்பி அனுப்பிய பின் அதை மறுநிறைவேற்றம் செய்து அனுப்பிய பிறகு ஜனாதிபதிக்கு அனுப்ப முடியாது. Withheld என முடிவெடுத்த பின் மசோதாக்களை ஏன் ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டும்?. இவ்வாறு பல கேள்விகளை எழுப்பினர். பின்னர் வழக்கு விசாரணையை டிசம்பர் 11ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 2 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து