முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கெஜ்ரிவால் ராஜினாமா குறித்து கருத்து கேட்ட டெல்லி அமைச்சர்

வெள்ளிக்கிழமை, 1 டிசம்பர் 2023      இந்தியா
Gopal-Roy 2023-11-13

Source: provided

புதுடில்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை முன் ஆஜராகாமல் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பதவியை ராஜினாமா செய்வதா, வேண்டாமா என வீடு வீடாக மக்களிடம் ஆம் ஆத்மி அமைச்சர் கருத்து கேட்டு வருகிறார்.

டில்லி அரசின் புதிய மதுபான கொள்கையில் நடந்த பணமோசடி தொடர்பான வழக்கில் டில்லி ஆம் ஆத்மி கட்சி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு திகார் சிறையில் உள்ளார். இந்த விவகாரத்தில் பண மோசடி தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள அமலாக்கத்துறை டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. இதில் கெஜ்ரிவால் ஆஜராகாமல் உள்ளார். தனக்கு சம்மன் அனுப்பியது அரசியல் காழ்ப்புணர்ச்சி என குற்றம்சாட்டினர்.

இந்நிலையில் டில்லி ஆம் ஆத்மி அமைச்சர் கோபால் ராய், டில்லியின் கிழக்கு மாவட்டம், லஷ்மி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று பொது மக்களிடம் கருத்து கேட்டு வருகிறார். இதில் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக நீடிப்பதா அல்லது ராஜினாமா செய்வதா, தற்போது வரை கெஜ்ரிவால் ஆட்சி தங்களுக்கு திருப்தியாக உள்ளதா உள்ளிட்ட விவரங்களை கேட்டு வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து