முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆதித்யா எல்-1 விண்கலம் குறித்து இஸ்ரோ வெளியிட்ட முக்கிய தகவல்

சனிக்கிழமை, 2 டிசம்பர் 2023      இந்தியா
Isro-logo

பெங்களூரு, ஆதித்யா எல்-1 விண்கலம் குறித்து முக்கிய தகவலை இஸ்ரோ வெளியிட்டு உள்ளது. அதன்படி விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள 7 கருவிகளில் 2-வது கருவியான சோலார் விண்ட் அயன் ஸ்பெக்ட்ரோமீட்டர்  என்ற கருவி தற்போது செயல்பட தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா-எல் 1 என்ற விண்கலத்தை இஸ்ரோ, கடந்த செப்டம்பர் 2-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலமானது 125 நாட்கள் பயணம் செய்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள லெக்ராஞ்சியன் புள்ளி-1ஐ சென்றடையும் என்றும், அங்கிருந்து சூரியனை ஆய்வு செய்யும் பணியில் விண்கலம் ஈடுபடும் என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தனர்.

இதற்கிடையில், ஆதித்யா எல்-1 விண்கலம் வருகிற ஜனவரி 7-ம் தேதி லெக்ராஞ்சியன் புள்ளியை சுற்றி நிலைநிறுத்தப்படும் என்று சமீபத்தில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், ஆதித்யா எல்-1 விண்கலம் குறித்து முக்கிய தகவலை இஸ்ரோ வெளியிட்டு உள்ளது. 

விண்கலத்தில் 7 கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த கருவிகளில் இரண்டாவது கருவியான சோலார் விண்ட் அயன் ஸ்பெக்ட்ரோமீட்டர்  என்ற கருவி தற்போது செயல்பட தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. 

ஆதித்யா சூரிய காற்று துகள் கருவியில் புரோட்டான், ஆல்பா துகள்களில் உள்ள எண்ணிக்கை மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளது. 2 நாட்களில் ஸ்பெக்ட்ரோமீட்டர் கருவியால் கைப்பற்றப்பட்ட புரோட்டான் மற்றும் ஆல்பா துகள் எண்ணிக்கையில் உள்ள ஆற்றல் மாறுபாடுகளை ஹிஸ்டோகிராம் விளக்குகிறது.     

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 days ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 days ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 17 hours ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 18 hours ago
View all comments

வாசகர் கருத்து