முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இண்டியா கூட்டணியின் அடுத்த கூட்டம் டெல்லியில் வரும் 6-ம் தேதி நடக்கிறது : காங்கிரஸ் தலைவர் கார்கே தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 3 டிசம்பர் 2023      இந்தியா
INDIA 2023-08-30

Source: provided

புதுடெல்லி : இண்டியா கூட்டணியின் அடுத்த கூட்டம் வரும் 6-ம் தேதி டெல்லியில் நடைபெறவிருப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களில் கடந்த 30-ம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த 4 மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. 

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இண்டியா கூட்டணியின் அடுத்த கூட்டம் வரும் 6-ம் தேதி டெல்லியில் நடைபெறவிருப்பதாகவும், கூட்டணி கட்சிகள் கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுத்துள்ளார். 

வரும் 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வைத் தோற்கடிக்கும் முடிவுடன் 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பா.ஜ.க.வுக்கு எதிராக கூட்டணி அமைத்தன. இந்தக் கூட்டணிக்காக கட்சிகளை இணைக்கும் வேலைகளில் ஐக்கிய ஜனதாதளம் தலைவர் முக்கிய பங்காற்றினார். 

கடந்த ஜூன் மாதம் இக்கூட்டணியின் முதல் கூட்டம் பாட்னாவில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இரண்டாவது கூட்டம் ஜூலையில் பெங்களூருவில் நடைபெற்றது. அப்போதுதான் கூட்டணிக்கு இண்டியா என்ற பெயரும் சூட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து, மூன்றாவது கூட்டம் மும்பையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து