முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மிக்ஜாம் புயல்: சென்னை மெரினா கடற்கரை நுழைவாயில் மூடல்

ஞாயிற்றுக்கிழமை, 3 டிசம்பர் 2023      தமிழகம்
Marina-Beach 2023-12-03

Source: provided

சென்னை : மிக்ஜாம் புயல் எதிரொலியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மெரினா கடற்கரை நுழைவாயில் மூடப்பட்டுள்ளது. 

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக பலத்த காற்று வீசுவதால் பொதுமக்கள் யாரும் மெரினா கடற்கரைக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருப்பதோடு, கடற்கரையின் நுழைவாயில் மூடப்பட்டுள்ளது.

மிக்ஜாம் புயலானது நாளை 5-ம் தேதி முற்பகலில் ஆந்திரா கடற்கரையை நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்துக்கும் இடையே தீவிர புயலாக கடக்கக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், பலத்த காற்று வீசுவதாலும், பொதுமக்கள் வேடிக்கை பார்க்க கடற்கரைக்கு வருவார்கள் என்பதாலும் முன்னெச்சரிக்கையாக மெரினா கடற்கரையின் நுழைவாயில் தடுப்புகள் அமைத்து மூடப்பட்டுள்ளது. மக்கள் யாரும் கடற்கரைக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து