முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்ற குளிர்கால தொடர் தொடங்கியது : 19 மசோதாக்கள் நிறைவேற்றப்படுகிறது

திங்கட்கிழமை, 4 டிசம்பர் 2023      இந்தியா
Parliment 2023-07-26

Source: provided

டெல்லி : பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் நேற்று தொடங்கி நடைபெற்றது. டிச. 22-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் இத்தொடரில் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆர்பிசி), சாட்சியங்கள் சட்டம் ஆகிய குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றான 3 மசோதாக்கள் உள்ளிட்ட 19 மசோதாக்கள் தாக்கலாகவுள்ளன.

சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய மாநிலங்களின் பேரவைத் தேர்தல் முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை வெளியாகின. தெலங்கானா தவிர இதர மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ள நிலையில், பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.

இந்த கூட்டத்தொடரில் மணிப்பூர் பிரச்னை, விலைவாசி உயர்வு, இந்திய-சீன எல்லை விவகாரம், எதிர்க்கட்சிகளைக் குறிவைத்து மத்திய விசாரணை அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு உள்ளிட்ட விவகாரங்களை எதிர்க்கட்சிகள் எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், குற்றவியல் சட்டங்களுக்கு பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய சாக்ஷிய மற்றும் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதற்கு பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என்று தெரிகிறது.

பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்ப லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில், திரிணமூல் காங்கிரஸ் பெண் எம்.பி. மஹுவா மொய்த்ராவின் பதவியைப் பறிக்க பரிந்துரைக்கும் மக்களவை நெறிமுறைகள் குழுவின் அறிக்கை, மக்களவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கையை திரிணமூல் காங்கிரஸ் எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குளிர்கால கூட்டத்தொடரை சுமுகமாகவும் ஆக்கபூர்வமாகவும் நடத்தும் வகையில், அனைத்து பிரச்னைகள் குறித்தும் ஒழுங்குமுறையுடன் விவாதிக்கத் தயாராக உள்ளதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளது. பாராளுமன்றத்தில் ஏற்கெனவே 37 மசோதாக்கள் நிலுவையில் உள்ள நிலையில், இதில் 12 மசோதாக்கள் பரிசீலனை மற்றும் நிறைவேற்றத்துக்காக கொண்டுவரப்படவுள்ளன. இதுதவிர 7 மசோதாக்கள் அறிமுகம், பரிசீலனை மற்றும் நிறைவேற்றத்துக்காகப் பட்டியலிடப்பட்டுள்ளன.

மக்களவை, பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் சட்டப் பிரிவுகளை புதுச்சேரி, ஜம்மு-காஷ்மீர் ஆகிய யூனியன் பிரதேசங்களுக்கும் நீட்டிக்கும் 2 மசோதாக்கள், தலைமைத் தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதா உள்ளிட்டவை இதில் அடங்கும். இந்த மசோதாக்கள் தவிர, 2023-24-ஆம் ஆண்டுக்கான முதல்கட்ட மானிய கோரிக்கைகளும் தாக்கல் செய்யப்பட்டு, வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 6 days ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 6 days ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 2 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து