முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனமழை எதிரொலி: சென்னையில் இருந்து புறப்படும் 12 ரெயில்கள் முழுமையாக ரத்து

திங்கட்கிழமை, 4 டிசம்பர் 2023      தமிழகம்
Tairn 2023-05-25

Source: provided

சென்னை : மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் இருந்து புறப்படும் 12 ரயில்கள் முழுமையாகவும், 6 ரயில்கள் பகுதியாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஞாயிற்றுக்கிழமை காலை புயலாக வலுப்பெற்றது. ‘மிக்ஜம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள புயல் சென்னைக்கு தென் கிழக்கே சுமார் 88 கி.மீ. தொலைவில் நிலைகொண்டிருந்தது. வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘மிக்ஜம்’ புயல் காரணமாக சென்னையில் விடிய விடிய சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால், சாலைகள், தண்டவாளங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளது.

இந்த நிலையில், பேசின் பிரிட்ஜ் மற்றும் வியாசர்பாடி பாலங்களில் நீர் அபாய கட்டத்தை தாண்டியுள்ளதால் ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் மேட்டுப்பாளையம் நீலகிரி(12671) விரைவு ரயில், கோவை சேரன்(12673) விரைவு ரயில், போடிநாயக்கனூர்(20601) விரைவு ரயில், ஆலப்புலா(22639) விரைவு ரயில், மைசூரு காவேரி(16021) விரைவு ரயில், திருவனந்தபுரம்(12623) அதிவிரைவு ரயில், பெங்களூரு(12657) விரைவு ரயில், ஈரோடு ஏற்காடு(22649) விரைவு ரயில், பாலக்காடு(22651) விரைவு ரயில், பெங்களூரு(12027) விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், கொல்லத்திலிருந்து சென்னை எழும்பூர் வரும் 16102 ரயில், செங்கல்பட்டிலிருந்து காச்சிகுடா விரைவு ரயில்(17651) விரைவு ரயில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல், சென்னை சென்ட்ரல், எழும்பூர் வரவேண்டிய 6 ரயில்கள் காட்பாடி, அரக்கோணம் மற்றும் செங்கல்பட்டில் நிறுத்தப்பட்டு அங்கிருந்து புறப்பட்டுச் செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, சென்னையிலிருந்து திருப்பதி, பெங்களூர், கோவை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து