முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விராட் கோலியின் சாதனை சமன்

திங்கட்கிழமை, 4 டிசம்பர் 2023      விளையாட்டு
Virat-Kohli 2023 08 11

Source: provided

இங்கிலாந்து அணி மேற்கிந்திய தீவுகள் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் 5 டி20 போட்டிகள் விளையாட உள்ளது.  முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 325/10 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹாரி புரூக் 71 ரன்களும் ஜாக் க்ராவ்லி 48 ரன்களும் சால்ட் 45 ரன்களும் எடுத்தனர். அடுத்து ஆடிய மே.இ.தீவுகள் அணி 48.5 ஓவரில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 326 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் ஷாய் ஹோப் அதிரடியாக சதமடித்து வெற்றிக்கு வித்திட்டார். கடைசி 2 பந்துகளில் 2 சிக்ஸர்கள் அடித்து அசத்தினார். 

தொடக்க வீரர் அலிக் அதான்ஜா 66 ரன்களும் ரொமாரியோ ஷெபார்ட் 49 ரன்களும் எடுத்து வெற்றிக்கு உதவினர். ஆட்ட நாயகன் விருது பெற்றார் ஷாய் ஹோப். மேலும் அத்துடன் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 5000 ரன்களை கடந்தப் பட்டியலில் விவ் ரிச்சர்ட்ஸ், விராட் கோலியின் சாதனையை சமன் செய்துள்ளார். 

______________

டோனிக்கு ஷாய் ஹோப் புகழாரம்

இங்கிலாந்து அணி மேற்கிந்திய தீவுகள் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் 5 டி20 போட்டிகள் விளையாட உள்ளது.  நேற்று முன்தினம் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 325/10 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹாரி புரூக் 71 ரன்களும் ஜாக் க்ராவ்லி 48 ரன்களும் சால்ட் 45 ரன்களும் எடுத்தனர். அடுத்து ஆடிய மே.இ.தீவுகள் அணி 48.5 ஓவரில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 326 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் ஷாய் ஹோப் அதிரடியாக சதமடித்து வெற்றிக்கு வித்திட்டார். கடைசி 2 பந்துகளில் 2 சிக்ஸர்கள் அடித்து அசத்தினார். 

ஆட்ட நாயகன் விருது பெற்ற ஹோப், “வெற்றிக்காக விளையாடினேன். சதம் என்பது கூடுதல் போனஸ். நாங்கள் வெற்றியடைந்ததுக்கு மகிழ்ச்சி. சில நாள்களுக்கு முன்பாக நான் டோனியிடம் பேசியிருக்கிறேன். அபோது அவர் களத்தில் அதிகம் நேரம் இருக்க வேண்டும் எனக் கூறியது எனது நினைவுக்கு வந்தது. இதே மாதிரி தொடரினை முடிக்க வேண்டும். உலகத்தில் சிறந்த அணியாக மாற வேண்டுமானால் சிறந்த அணி போல் விளையாட வேண்டும்” எனக் கூறினார். 

______________

வெற்றி குறித்து அர்ஷ்தீப் சிங்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி பெங்களூருவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் நிறைவு செய்தது. நேற்று நடைபெற்ற கடைசி டி20 போட்டியில் ஆட்டத்தின் இறுதி ஓவரை அர்ஷ்தீப் சிங் சிறப்பாக வீசினார். முதல் மூன்று ஓவர்களில் 37  ரன்களை விட்டுக் கொடுத்த அர்ஷ்தீப் கடைசி ஓவரில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட வெறும் 3  ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். கடைசி  ஓவரில் ஆஸ்திரேலிய கேப்டன் மேத்யூ வேட் விக்கெட்டை வீழ்த்தியது ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்து இந்திய அணிக்கு வெற்றியைத் தந்தது.

இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மேத்யூ வேட் விக்கெட்டை வீழ்த்திய பிறகு போட்டியில் வெற்றி பெறும் நம்பிக்கை வந்ததாக இந்திய அணியின் அர்ஷ்தீப் சிங் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் பேசியதாவது: பந்துவீசுவதற்கு  ஏற்ற  சாதகமான சூழல் பெரிதாக இல்லை. என்னால் தொடக்கத்தில் அதன் காரணமாகவே சரியாக பந்துவீச முடியவில்லை. ஒரு பந்துவீச்சாளராக பேட்ஸ்மேன்களுக்கு சவாலளிக்கும் விதமாக கடைசி ஓவரின் முதல் பந்தை பௌன்சராக வீசினேன். ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மேத்யூ வேட் விக்கெட்டை வீழ்த்திய பிறகு வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை வந்தது. கேப்டன்  சூர்யகுமார் யாதவ் வீரர்களை சுதந்திரமாக விளையாட அறிவுறுத்தினார். ஆட்டத்தின்  முடிவினைப் பற்றி கவலைப்படாமல் சுதந்திரமாக பந்துவீசுமாறு அவர் கூறினார் என்றார். 

______________

ஐ.பி.எல்.லில் ஆர்ச்சர் பங்கேற்பாரா?

சமீபத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ஆர்ச்சர் விடுவிக்கப்பட்டார். 2022இல் ரூ.8 கோடி ஏலத்தில் எடுக்கப்பட்ட ஆர்ச்சர் மும்பை அணிக்கு ஒழுங்காக விளையாடவில்லை. காயம் காரணமாக மோசமான பங்களிப்பினையே அளித்தார். துபையில் வரும் டிச.19ஆம் தேதி நடைபெற உள்ள ஐபிஎல் மினி ஏலத்தில் ஆர்ச்சர் பெயர் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

28 வயதான ஆர்ச்சர் 2024இல் நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க உள்ளதால் அவரது வேலைப் பளுவைக் குறைக்க ஐபிஎல் போட்டிகளில் விளையாடமாட்டார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 34 இங்கிலாந்து வீரர்கள் இதுவரை ஐபிஎல் ஏலத்திற்காக பதிவு செய்துள்ளார்கள். ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்கள். 

______________

இந்திய தொடர் சவால்: மெக்குல்லம்

டெஸ்டில் தொடர் தோல்வியிலிருந்ததால் இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து ஜோ ரூட் 2022இல் விலகினார். மெக்குல்லம் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு பென் ஸ்டோக்ஸ் கேப்டன் ஆனார்.  மெக்குல்லம் - பென் ஸ்டோக்ஸ் தலைமையில் இங்கிலாந்து அணி அதிரடியாக விளையாடி வருகிறது. இந்த அணுகுமுறைக்கு கிரிக்கெட் ரசிகர்கள் பேஸ்பால் என பெயர் வைத்துள்ளனர். அடுத்தாண்டு தொடக்கத்தில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி விளையாட உள்ளது. 2024ஆம் ஆண்டு ஜனவரி 25இல் முதல் டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது. 

இது குறித்து பயிற்சியாளர் மெக்குல்லம் கூறியதாவது., இந்தியாவில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவது மிகப்பெரிய சவாலாக இருக்கும். சிறந்த அணியுடன் மோத வேண்டுமெனில் இந்தியாவை அந்த சொந்த மண்ணில் எதிர்கொள்வதுதான் சரியாக இருக்கும். இதில் வெற்றி பெற்றால் புகழப்படுவோம் இல்லையெனில் இகழப்படுவோம்.எங்களது பேஸ்பால் அணுகுமுறையால் உடனடி பலன் கிடைத்துண்டு. ஆனால் இது எங்களுக்கு இன்னும் முழுமையானதாக அமையவில்லை எனக் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 6 days ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 6 days ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 2 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து