முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் ரூ.4,000 கோடியில் வடிகால் அமைத்ததாக கூறும் தி.மு.க. அரசு, ரூ.4 கோடிக்கு கூட வடிகால்களை அமைக்கவில்லை : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ குற்றச்சாட்டு

திங்கட்கிழமை, 4 டிசம்பர் 2023      தமிழகம்
sellur-raj 2023 06 19

Source: provided

மதுரை : சென்னையில் 4000 கோடி ரூபாய் மதிப்பில் மழை நீர் வடிகால்  அமைத்ததாக கூறும் தி.மு.க. அரசு 4 கோடி ரூபாய் அளவிற்கு கூட வடிகால் அமைக்கவில்லை என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி பகுதி துணைச் செயலாளர் முத்துப்பாண்டி ஏற்பாட்டில் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு புத்தாடைகளை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.வழங்கினார். இதில் நிர்வாகிகள் வில்லாபுரம் ஜெ.ராஜா, எம்.எஸ்.பாண்டின், கே.ஜெயவேலு, கவுன்சிலர் ஏ.மாயத்தேவன், சுப்பையா, டி.எம்.குமார், வடிவேல் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

பின்னர் மதுரை மாநகர மாவட்ட அ.தி.மு.க.செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.நிருபர்களிடம் கூறியதாவது-

சென்னையில் மழை நீர் வடிவதற்கு 4 கோடி ரூபாயில் கூட மழைநீர் வடிகால் அமைக்கவில்லை. 4000 கோடி ரூபாய் செலவில் மழை நீர் வடிவதற்கு வடிகால் அமைக்கப்பட்டதாக தமிழக அரசு கூறியிருந்தது, தி.மு.க. தலைமையிலான அரசு பேச்சோடு சரி, எந்த ஒரு செயல்பாடுகளும் செய்யவில்லை. தி.மு.க. அரசு புயல் முன்னச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டது குறித்து மக்களுக்கு திருப்திகரமாக இல்லை. தி.மு.க. உண்மையான சுயமரியாதை இயக்கமாக செயல்படவில்லை. தி.மு.க.வினர் கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்துகிறார்கள்.

அதே நேரத்தில் தங்களை சுயமரியாதைக்காரர்கள் என காட்டிக்கொண்டு சிறுபான்மை மக்களை ஏமாற்றி வருகிறார்கள். நடிகர் விஜயகாந்த் உடல்நலம் தேறி வர வேண்டுமென அன்னை மீனாட்சியை வேண்டிக்கொள்கிறேன். சினிமாவில் எம்.ஜி.ஆர். போலவே விஜயகாந்தும் தாங்கள் உண்ணும் உணவைத்தான் சக ஊழியர்களுக்கும் வழங்குவார்கள். சினிமாவிலும் அரசியலிலும் விஜயகாந்த் கரை படியாக கரத்திற்கு சொந்தக்காரர் ஆவார். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து