முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடு விமர்சனம்

செவ்வாய்க்கிழமை, 5 டிசம்பர் 2023      சினிமா
Nadu-review 2023-12-05

Source: provided

பிக் பாஸ் தர்ஷன், மஹிமா நம்பியார், சிங்கம் புலி நடித்து M. சரவணன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் நாடு. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு மலைகிராமத்தில் உள்ள மருத்துவ மனையில் பணிபுரிய மருத்துவர்கள் தயங்குகிறார்கள். அரசால் அனுப்பபடும் பெண் மருத்துவரை தக்க வைக்க ஊர் மக்கள் செய்யும் முயற்சிதான் இந்த நாடு படத்தின் மீதி கதை. ’எங்கேயும், எப்போதும்’ இயக்குனர் M.சரவணன் இப்படத்தில் மனித  உணர்ச்சிகளின் வழியே சிறிது நாடக பாணியில் படம் தந்துள்ளார். 

நீட் அரசியல், மாறி வரும் உணவு பழக்கம் போன்ற விஷயங்களை தொட்டு விட்டு செல்கிறது நாடு.  பிக் பாஸ் தர்ஷனுக்கு இது கண்டிப்பாக பெயர் சொல்லும் படமாக இருக்கும். ஒரு சோகம் கலந்த நடிப்பில் நம்மை 'அட 'சொல்ல வைக்கிறார். டாக்டராக நடிக்கும்  மஹிமா முதலில் ஊர் மக்களை வெறுப்பதும், பின்பு புரிந்து கொண்டு நேசிப்பதும் என மாறுபட்ட நடிப்பை தந்துள்ளார். சக்திவேலின் ஒளிப்பதிவில் சத்தியாவின் இசை  ஒரு தாலாட்டு போல் இருக்கிறது. இந்தியாவின் ஆன்மா கிராமம் என்பார்கள். இந்த கிராமம் இயங்க நல்ல மருத்துவமனைகள் தேவை என்பதை வலியுறுத்துகிறது இப்படம்.  மொத்தத்தில் நாடு திரைப்படம் நாம் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய திரைப்படம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து