முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் போலீசார் சோதனை நடத்த சென்ற வீட்டில் குண்டு வெடித்தது

செவ்வாய்க்கிழமை, 5 டிசம்பர் 2023      உலகம்
America-1 2023-08-29

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்காவில் சோதனை நடத்த முயன்ற போது வீட்டில் குண்டு வெடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனின் புறநகர் பகுதியான ஆர்லிங்டனில் உள்ள ஒரு வீட்டில் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். துப்பாக்கி சத்தம் கேட்ட வீட்டுக்குள் போலீசார் நுழைந்து சோதனை நடத்த முயற்சித்தனர். 

அப்போது வீட்டுக்குள் இருந்த நபர் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். திடீரென்று அந்த வீட்டில் குண்டு வெடித்தது. பயங்கர சத்தத்துடன் பல அடி உயரத்துக்கு தீ பிழம்பு கிளம்பியது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

குண்டு வெடித்ததில் வீடு முற்றிலும் இடிந்தது. அங்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை கடுமையாக போராடி அணைத்தனர். சோதனை நடத்த சென்ற போலீசார் அதிகாரிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. 

வீட்டுக்குள் இருந்த நபர் உயிரிழந்தாரா? அல்லது தப்பி சென்றாரா? என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை. குண்டு வெடித்த வீட்டில் இருந்த நபர், வெடி மருந்துகளை பதுக்கி வைத்து இருந்து போலீசார் வந்ததும் அதை வெடிக்க வைத்து இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 days ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 days ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 11 hours ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 12 hours ago
View all comments

வாசகர் கருத்து