எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி : இண்டியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் இம்மாதம் 3-வது வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
.2024 மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்தும் நோக்கத்துடன் தி.மு.க, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாடி, உத்தவ் தாக்கரே சிவசேனா உள்ளிட்ட 26 எதிர்க்கட்சியினர் ஒன்றிணைந்து இண்டியா என்ற புதிய கூட்டணியை உருவாக்கி உள்ளனர்.
இக்கூட்டணியின் சார்பில் 3 கூட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இதனிடையே தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநில பேரவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதால் இண்டியா கூட்டணியின் அடுத்த கூட்டம் நடைபெறவில்லை.
இந்நிலையில் இண்டியா கூட்டணியின் 4-வது கூட்டம் டெல்லியில் இன்று கூடும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் காங்கிரசின் 4 மாநில தேர்தல் தோல்வி பாராளுமன்ற தேர்தலில் எப்படி தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இந்த கூட்டத்தில மம்தா பானர்ஜி, நிதிஷ் குமார், அகிலேஷ் யாதவ், மு.க. ஸ்டாலின், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோர் கலந்து கொள்ள வாய்ப்பில்லை என தகவல் வெளியானது.
தங்களது கட்சி பிரதிநிதிகளை அனுப்பி வைக்க முடிவு செய்தனர்.முக்கியமான தலைவர்கள் பங்கேற்காமல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றால் அது சரியாக இருக்குமா? என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் கூட்டம் டிசம்பர் 3-வது வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |