முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கென்ய அதிபருடன் பா.ஜ.க. தலைவர் ஜெ.பி.நட்டா சந்திப்பு

புதன்கிழமை, 6 டிசம்பர் 2023      இந்தியா
William-JP-Natta 2023-12-06

Source: provided

புதுடெல்லி : இந்தியா வந்துள்ள கென்ய அதிபர் வில்லியம் ரூடோவை பா.ஜ.க. தலைவர் ஜெ.பி.நட்டா நேற்று சந்தித்துப் பேசினார்.

ஜனாதிபதி திரௌபதி முர்முவின் அழைப்பின்பேரில், கென்ய அதிபர் வில்லியம் ரூடோ மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார்.  கடந்த திங்கள்கிழமை முதல் வில்லியம் ரூடோ, ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட பல தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார்.

இந்நிலையில் டெல்லியில் உள்ள கென்ய அதிபர் வில்லியம் ரூடோவை பா.ஜ.க.வின் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா நேற்று சந்தித்துப் பேசினார்.  இது குறித்து ஜெ.பி.நட்டா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, 

இன்று(நேற்று) கென்ய அதிபர் வில்லியம் ரூடோவை சந்தித்து பா.ஜ.க.வின் கொள்கைகள், கட்சியின் முன்னெடுப்புகள் குறித்து விளக்கினேன். கென்யாவின் ஆளும் கட்சியான யு.டி.ஏ. மற்றும் பா.ஜ.க. இடையிலான தொடர்புகளை மேம்படுத்த இருவரும் ஒப்புக்கொண்டோம். மேலும் அவரது கட்சியின் பிரதிநிதியை இந்தியா வருவதற்கு அழைப்பு விடுத்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார். 

கென்யாவின் அதிபராக ரூடோ பதவியேற்ற பிறகு இந்தியாவுக்கு முதன்முறையாக வந்துள்ளார். ஜி-20 கூட்டமைப்பில் 55 நாடுகளை உறுப்பினா்களாக கொண்ட ஆப்பிரிக்க ஒன்றியம் இணைக்கப்பட்டு 3 மாதங்கள் கடந்துள்ள நிலையில் அதிபா் ரூடோ இந்திய பயணம் மேற்கொண்டுள்ளார். ஆறு ஆண்டுகளுக்கு பின் கென்யாவின் அதிபா் ஒருவர் இந்தியாவுக்கு வருகை புரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து