முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனமழையால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் பள்ளிகள் திங்கட்கிழமை மீண்டும் திறப்பு

வியாழக்கிழமை, 7 டிசம்பர் 2023      தமிழகம்
School-Education 2022 02 11

சென்னை, சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வரும் திங்கட்கிழமை (11ம் தேதி) பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

மிக்ஜம் புயல் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழை கொட்டித் தீர்த்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. இதனிடையே வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனால் சென்னை, திருவள்ளுர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. 

இந்த நிலையில் இன்று சென்னையில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு  மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 தாலுகாக்கள் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2 தாலுக்காக்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் வரும் 11ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பள்ளிகள் திறப்பதற்கு முன்பாக தூய்மை, மின் இணைப்பு உள்ளிட்ட உரிய முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.  இந்த நிலையில், சென்னையில் இன்று ஆசிரியர்கள் மட்டும் பள்ளிக்கு வர உத்தரவிடப்பட்டு உள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். பள்ளிகளை திறப்பதற்கான முன்னேற்பாடுகளை செய்ய ஏதுவாக பள்ளிக்கு வர அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து