முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரு பந்தில் 7 ரன்கள் அடித்த ஆஸ்திரேலிய வீரர் ரென்ஷா

வெள்ளிக்கிழமை, 8 டிசம்பர் 2023      விளையாட்டு
Australian 2023-12-08

Source: provided

சிட்னி : ஒரு பந்தில் 7 ரன்கள் அடித்துள்ளார் ஆஸ்திரேலிய வீரர் ரென்ஷா.

டெஸ்ட் போட்டி...

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் வரும் 14-ந்தேதி தொடங்க உள்ளது. அதற்கு முன்பாக ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணிக்கு எதிராக 4 நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் விளையாடுகிறது. இந்த பயிற்சி ஆட்டம் கடந்த 3 நாட்களுக்கு முன் தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 9 விக்கெட் இழப்பிற்கு 391 ரன்கள் குவித்து 'டிக்ளேர்' செய்தது. கேப்டன் ஷான் மசூத் இரட்டை சதம் (201 ரன்) அடித்து களத்தில் இருந்தார்.

78-வது ஓவரில்... 

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணி 2-வது நாள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்திருந்தது. இந்த ஆட்டத்தின்போது பாகிஸ்தான் அணியின் மோசமான பீல்டிங்கால் ஆஸ்திரேலிய வீரர் ரென்ஷா ஒரு பந்தில் 7 ரன்கள் எடுத்து அரைசதம் கடந்தார். இந்த சம்பவம் 78-வது ஓவரில் அரங்கேறியது. இந்த ஓவரை அப்ரார் அகமது வீசினார். ரென்ஷா 47 ரன்களில் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். 

ரென்ஷா அரைசதம்... 

இந்த ஓவரின் 4-வது பந்தை ரென்ஷா அடித்தார். இதனை பவுண்டரி செல்லவிடாமல் தடுத்த ஷான் மசூத் பந்து வீச்சாளர் பக்கம் வீசினார். அதனை பிடித்த பாபர் அசாம் கீப்பர் பக்கம் வீசினார். அதனை விக்கெட் கீப்பர் சப்ராஸ் அகமது பிடிக்காத நிலையில் பந்து பவுண்டரி சென்றது. 3 ரன்கள் ஓடி எடுத்த நிலையில் பவுண்டரியையும் சேர்த்து மொத்தம் அந்த பந்தில் 7 ரன்கள் வந்தன. அதன் மூலம் ரென்ஷா அரைசதம் கடந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து