முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெறும் 43 பந்தில் 193 ரன்கள்: டி-10 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை படைத்த ஹம்சா சலீம்

வெள்ளிக்கிழமை, 8 டிசம்பர் 2023      விளையாட்டு
Hamza-Saleem 2023-12-08

Source: provided

பார்சிலோனா : ஐரோப்பியன் கிரிக்கெட் 'டி10' தொடரில் ஹம்சா சலீம் தார் என்பவர் வெறும் 43 பந்துகளில் 193 ரன்கள் விளாசி சாதனை படைத்துள்ளார்.

சிக்சர் மழை... 

ஸ்பெயினின் பார்சிலோனாவில் ஐரோப்பியன் கிரிக்கெட் டி10 தொடர் நடக்கிறது. அதில் கடந்த டிச.,5ம் தேதி கேடலுன்யா ஜாகுவார் (சி.ஜே.ஜி) அணியும், சோஹல் ஹாஸ்பிடல்டெட் (எஸ்.ஓ.எச்) அணியும் மோதின. 10 ஓவர்கள் கொண்ட இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கேடலுன்யா அணிக்கு ஹம்சா சலீம் தார் மற்றும் யாசிர் அலி ஆகியோர் துவக்கம் தந்தனர். முதல் பந்தில் இருந்தே அதிரடி காட்டிய இருவரும், சிக்சர் மழை பொழிந்தனர். குறிப்பாக ஹம்சா சலீம் ருத்ரதாண்டவம் ஆடினார்.

24வது பந்தில் சதம்... 

12வது பந்தில் அரைசதம் கடந்த ஹம்சா சலீம், 24வது பந்தில் சதம் விளாசினார். தொடர்ந்து அதிரடி காட்டிய அவர் வெறும் 43 பந்தில் 193 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 14 பவுண்டரி, 22 சிக்சர்கள் அடங்கும். இதன்மூலம் டி10 கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை ஹம்சா சலீம் படைத்தார். (முந்தைய சாதனை 163 ரன்கள்). மறுமுனையில் யாசிர் அலி 19 பந்தில் 58 ரன்கள் (3 பவுண்டரி, 7 சிக்சர்) சேர்த்தார். முடிவில் அந்த அணி 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 257 ரன்கள் குவித்தது. கடினமான இலக்கை விரட்டிய சோஹல் ஹாஸ்பிடல்டெட் அணி 10 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 153 ரன்கள் வித்தியாசத்தில் கேடலுன்யா ஜாகுவார் வெற்றிப்பெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து