முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முண்டாசுப்பட்டி பட நடிகர் மதுரை மோகன் காலமானார்

சனிக்கிழமை, 9 டிசம்பர் 2023      சினிமா
Madurai-Mohan 2023-12-09

Source: provided

சென்னை : முண்டாசுபட்டி பட புகழ் நடிகர் மதுரை மோகன் நேற்று காலை உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு நடிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து  வருகின்றனர். 

நடிகர் மதுரை மோகன் பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.  40 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் இருந்தும் அடையாளம் காணப்படாத நடிகராக வலம் வந்த இவருக்கு இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், காளி வெங்கட் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான முண்டாசுப்பட்டி திரைப்படத்தில்  சிறப்பான கதாபாத்திரம் கிடைத்தது. 

இந்த படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்து மக்கள் மனதில் தனக்கான இடத்தை பிடித்தார். தொடர்ந்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நடிகர் மதுரை மோகன்  கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். 

இது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர்கள் பலர் இவருக்கு சமூக வலைதளத்தில் மூலம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து