முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மூன்றாம் மனிதன் விமர்சனம்

சனிக்கிழமை, 6 ஜனவரி 2024      சினிமா
Third-Man-Review 2024-01-06

Source: provided

மருத்துவமனை ஊழியரான சோனியா அகர்வாலின் கணவர் கொலை செய்யப்படுகிறார். அந்த கொலையை புலன் விசாரணை செய்யும் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாக்யராஜ், பல அதிர்ச்சிகரமான உண்மைகளை கண்டுபிடிக்கிறார். அது என்ன? என்பதை பரபரப்பான கிரைம் சஸ்பென்ஸ் திரில்லராக மட்டும் இன்றி தம்பதிகளுக்கு ஏற்ற நல்ல மெசஜாகவும் சொல்வது தான் ‘மூன்றாம் மனிதன்’ படத்தின் கதை.

போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்திருக்கும் கே.பாக்யராஜின் அனுபவம் வாய்ந்த நடிப்பு கதைக்கு பலம் சேர்த்திருக்கிறது. கதையின் மையக்கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரிஷிகாந்த் பிரணா, முதல் படத்திலேயே பலம் வாய்ந்த கதாபாத்திரத்தில் மிக சிறப்பாக நடித்திருக்கிறார். சோனியா அகர்வால் ஆரம்பத்தில் கவனம் ஈர்த்தாலும், அவருக்கு கொடுக்கப்பட்ட குறைவான பணியை நிறைவாக செய்திருக்கிறார்.

12ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவனுக்கு ஆட்சியர் பரிசு வழங்குகிறார். அந்த நிகழ்வுக்காக வரும் அந்த மாணவரின் தந்தை, பள்ளியில் உள்ள கழிவறைக்கு சென்று அங்குள்ளா தண்ணீர் குழாயில் தண்ணீர் பிடித்து மது அருந்துகிறார். இப்படி ஒரு அறிமுக காட்சியை வைத்து ரசிகர்களின் கவனத்தை ஆரம்பத்திலேயே ஈர்த்துவிடும் இயக்குநர் ராம்தேவ், அதன் பிறகு கொலை மற்றும் அதன் புலன் விசாரணையை தொடங்கி, படத்தை வேகமாக பயணிக்க வைத்து ரசிகர்களை இருக்கையின் நுனியில் கொண்டு சேர்க்கிறார் இயக்குனர். மொத்தத்தில் படம் பார்க்க செல்பவர்களுக்கு நல்லதொரு மெசேஜை கொடுத்திருக்கிறார் அவருக்கு சிறப்பு பாராட்டுக்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து