முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாங்கள் மேம்பட்டுள்ளோம்: மந்தனா

திங்கட்கிழமை, 19 பெப்ரவரி 2024      விளையாட்டு
Harmanpreet-Kaur 2023-07-23

Source: provided

பெண்கள் ஐ.பி.எல். எனப்படும் பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி. வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் (ஆர்.சி.பி.) ஆகிய 5 அணிகள் பங்கேற்றன. முதலாவது டபிள்யூ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் கோப்பையை வென்றது.

இதனையடுத்து இந்த தொடரின் 2-வது சீசன் வரும் 23-ம் தேதி தொடங்க உள்ளது. முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோத உள்ளன. இதில் பெங்களூரு அணியின் கேப்டனாக இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் இந்த சீசன் குறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா கூறுகையில் "முதல் சீசனை விட இது சிறப்பாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எங்கள் அணியிலிருந்து சில வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். மேலும் நாங்கள் புதிய வீரர்களை வாங்கியுள்ளோம். எனவே கடந்த சீசனை விட இந்த முறை அணியின் சமநிலை நிச்சயமாக மேம்பட்டுள்ளது.

________________________________________________

4-வது வீரராக சர்பராஸ் கான்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முடிவடைந்துள்ள 3 போட்டிகளின் முடிவில் இந்திய அணி தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி வரும் 23-ம் தேதி ராஞ்சியில் நடைபெற உள்ளது.

முன்னதாக ராஜ்கோட்டில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் அறிமுக வீரராக இடம் பிடித்த சர்பராஸ் கான் இரு இன்னிங்சிலும் அரைசதம் (62 மற்றும் 68 ரன்) அடித்தார். இதன் மூலம் அவர் அறிமுகம் ஆன முதல் டெஸ்ட் போட்டியிலேயே இரு இன்னிங்சிலும் 50-க்கு மேற்பட்ட ரன்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் திலவார் உசேன், சுனில் கவாஸ்கர் வரிசையில் 4-வது வீரராக இடம்பிடித்து அசத்தியுள்ளார். அந்த பட்டியல்;- 1. திலவார் உசேன் - 59 & 57. 2.சுனில் கவாஸ்கர் - 65 & 67, 3.ஸ்ரேயாஸ் அய்யர் - 105 & 65, 4. சர்பராஸ் கான் - 62 & 68.

________________________________________________

ஜெய்ஸ்வாலுக்கு குக் பாராட்டு

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முன்னதாக இந்த தொடரில் இளம் வீரர் ஜெய்ஸ்வால் இங்கிலாந்து பவுலர்களை அட்டகாசமாக எதிர்கொண்டு 3 போட்டிகளில் 545 ரன்கள் குவித்து அதிக ரன்கள் அடித்த வீரராக சாதனை படைத்து வருகிறார். குறிப்பாக 2-வது போட்டியில் 209 ரன்கள் குவித்த அவர் 3-வது போட்டியில் 214 ரன்கள் குவித்தார். அதிலும் குறிப்பாக மூன்றாவது போட்டியின் 2-வது இன்னிங்சில் இங்கிலாந்தின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு எதிராக ஒரே ஓவரில் ஹாட்ரிக் சிக்சர்களை பறக்க விட்ட அவர் இந்த இன்னிங்சில் மொத்தம் 12 சிக்சர்கள் அடித்தார். அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற வாசிம் அக்ரமின் உலக சாதனையை ஜெய்ஸ்வால் சமன் செய்தார்.

இந்நிலையில் தம்முடைய மொத்த கெரியரில் அடித்த சிக்சர்களை விட ஜெய்ஸ்வால் வெறும் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர்கள் அடித்துள்ளதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் அலெஸ்டர் குக் பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு;- "என்னுடைய மொத்த கெரியரில் நான் அடித்ததை விட ஜெய்ஸ்வால் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர்கள் அடித்துள்ளார். இதன் மூலம் அவர் என்னுடைய கெரியர் முழுவதும் நான் செய்ததை ஜெய்ஸ்வால் ஒரு இன்னிங்சிலேயே முறியடித்து விட்டார் " என்று கூறினார். முன்னதாக தன்னுடைய கெரியரில் 161 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 12472 ரன்கள் குவித்த இங்கிலாந்து முன்னாள் வீரரான அலெஸ்டர் குக் தன்னுடைய கேரியரில் வெறும் 11 சிக்சர்கள் மட்டுமே அடித்துள்ளார். ஆனால் ஜெய்ஸ்வால் ஒரு இன்னிங்சில் 12 சிக்சர்கள் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

________________________________________________

காலிறுதியில் தமிழ்நாடு அணி

89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பவ்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் 'சி' பிரிவில் அங்கம் வகிக்கும் தமிழக அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் பஞ்சாப்புடன் மோதியது. இதில் வெற்றி பெற்றால் காலிறுதிக்கு முன்னேறலாம் என்ற சூழ்நிலையில் தமிழகம் விளையாடியது. இந்த ஆட்டம் சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் நடைபெற்றது.இதில் 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த தமிழக அணி முதல் இன்னிங்சில் 435 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய பஞ்சாப், தமிழக அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 274 ரன்களில் ஆல் அவுட் ஆனது. 

பின்னர் 161 ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய பஞ்சாப் 3-வது நாளில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்கள் அடித்திருந்தது. இதனையடுத்து 4-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது .தொடர்ந்து பேட்டிங் செய்த பஞ்சாப் மேற்கொண்டு 51 ரன்கள் அடித்த நிலையில், எஞ்சிய 6 விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் தமிழக அணிக்கு 71 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய தமிழ்நாடு 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 71 ரன்கள் அடித்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தமிழகம் 7 ஆண்டுகளுக்குப் பிறகு ரஞ்சி கோப்பை தொடரின் காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து