முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக மீனவருக்கு ஆறு மாதம் சிறை: இலங்கை கோர்ட் தீர்ப்பால் அதிர்ச்சி

வியாழக்கிழமை, 22 பெப்ரவரி 2024      இந்தியா
Fisher-Man 2023-11-09

Source: provided

கொழும்பு: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட தமிழக மீனவர் ஜான்சனுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து இலங்கை கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது தமிழக மீனவர்கள் மத்தியில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட தமிழக மீனவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 18 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்ட நிலையில், படகு ஓட்டுனரான ஜான்சன் என்பவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறை தண்டனை விதிக்கப்பட்ட மீனவர் ஜான்சன் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே 3 தமிழக மீனவர்களுக்கு இலங்கை கோர்ட்டு சிறை தண்டனை விதித்துள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு மீனவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருப்பது தமிழக மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து