முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒடிசாவில் வி.கே.பாண்டியன் மீது தக்காளி வீசிய இளைஞர் அடித்து, நொறுக்கிய தொண்டர்கள்

வியாழக்கிழமை, 22 பெப்ரவரி 2024      இந்தியா
V K Pandian

Source: provided

புவனேஸ்வர்:ஒடிசாவில் வி.கே.பாண்டியன் மீது தக்காளி வீசிய இளைஞர் பிஜூ தள தொண்டர்களால் தாக்கப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜூ ஜனதா தளம் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இந்த கட்சியின் 5டி தலைவராக இருப்பவர் வி.கே. பாண்டியன். குழுவாக பணியாற்றுதல், வெளிப்படை தன்மை, தொழில் நுட்பம் உள்ளிட்ட 5 காரணிகளை அடிப்படையாக கொண்டு இந்த 5டி தலைவர் பதவி அவருக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

அவர், தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். பின்னர் ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனி செயலாளராக பணியாற்றினார். இதனை தொடர்ந்து அவர், 5டி தலைவராக ஆக்கப்பட்டார். இந்நிலையில், ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் பெல்லாகுந்தா பகுதியில் நடந்த பொது கூட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக வி.கே. பாண்டியன் நேற்று வந்தார்.

அப்போது, அவரை நோக்கி தக்காளி வீசப்பட்டு உள்ளது. அவர் சற்றும் எதிர்பாராதபோது நடந்த இந்த நிகழ்வை அடுத்து, தக்காளி வீசியவரை சுற்றியிருந்தவர்கள் சூழ்ந்து கொண்டனர். அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு பாதுகாப்புக்கு வந்திருந்த போலீசார் அவர்களை தடுக்க முயன்றனர். எனினும், போலீசார் முன்னிலையிலேயே கட்சி தொண்டர்கள் அந்த இளைஞரை அடித்து, உதைத்தனர். இதில், அவர் கீழே விழுந்துள்ளார். பின்னர் அவரை போலீசார் மீட்டு, கைது செய்து அழைத்து சென்றனர்.

அவர், காங்கிரஸ் தொண்டர் என கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாக பிஜூ ஜனதா தளம் கட்சியின் நிகழ்ச்சிகள் மற்றும் வி.கே. பாண்டியனை எதிர்த்து வந்துள்ளார். இந்த நிகழ்வுக்கு பின் வழக்கம்போல், திட்டமிட்டபடி நிகழ்ச்சி நடந்தது. அதில் பேசிய வி.கே. பாண்டியன், என் மீது முட்டை, தக்காளி மற்றும் மை வீசினாலும் ஒடிசா மக்களுக்கு நான் சேவையாற்றுவேன் என கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து