முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பைரி விமர்சனம்

திங்கட்கிழமை, 26 பெப்ரவரி 2024      சினிமா
Pirie-review 2023-02-26

Source: provided

நாயகன் சையத் மஜித், படித்துவிட்டு வேலைக்கு போகாமல் புறா வளர்ப்பதில் ஈடுபாடு காட்டுவதோடு, புறா பந்தயமும் நடத்தி வருகிறார். ஊரில் பெரிய ரவுடியாக வலம் வரும் வினு லாரன்ஸும் புறா பந்தயம் நடத்துகிறார். புறா பந்தயத்தில் வினு லாரன்ஸ் செய்யும் மோசடியை சையத் மஜித் கண்டுபிடித்து தட்டிக்கேட்கிறார். இதனால், இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட, அதனால் நாயகன் எப்படிப்பட்ட சிக்கல்களை எதிர்கொள்கிறார், என்பதை நாகர்கோவில் மக்களின் வாழ்வியலோடு சொல்வது தான் ‘பைரி’.

நாகர்கோவில் மக்களின் வாழ்வியலை, எந்தவித மாற்றமும் இன்றி மிக எதார்த்தமாக சொல்லியிருப்பதோடு, புறா பந்தயத்தின் பின்னனியை மிக சுவாரஸ்யமாக விவரிக்கிறது இந்த பைரி. பைரி என்றால் புறாக்களை வேட்டையாடும் ஒருவகை கழுகு.

நாயகனாக நடித்திருக்கும் சையத் மஜித்தின் நடிப்பில் குறையில்லை

நாயகனின் நண்பர் வேடம் அசத்தல், அந்த வேடத்தில் நடித்திருக்கும் இயக்குநர் ஜான் கிளாடி டிகராகவும் கவனிக்க வைத்திருக்கிறார். சுயம்பு என்ற வில்லன் வேடத்தில் நடித்திருக்கும் வினு லாரன்ஸ், நாயகிகளாக நடித்திருக்கும் சரண்யா ரவிச்சந்திரன், மேக்னா எலன் என படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் மனதில் நிற்கும்படி இருக்கிறது

மொத்தத்தில், இந்த ‘பைரி’-வானுயர பறக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து