முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சத்தீஷ்கரின் சுக்மா மாவட்டத்தில் பள்ளிகளுக்கு ஹெலிகாப்டரில் கொண்டு செல்லப்பட்ட 10, 12-ம் வகுப்பு பொது தேர்வு வினாத்தாள்கள்

வெள்ளிக்கிழமை, 1 மார்ச் 2024      இந்தியா
Chhattisgar 2024-03-01

Source: provided

ராய்ப்பூர் : சத்தீஷ்கரில் நக்சல்கள் ஆதிக்கம் அதிகம் உள்ள சுக்மா மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஹெலிகாப்டரில் 10 மற்றும் 12-ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு வினாத்தாள்கள் கொண்டு செல்லப்பட்டன. 

சத்தீஷ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிக அளவில் உள்ளது. பொதுமக்கள், பாதுகாப்பு படையினர், தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினர் மீது நக்சலைட்டுகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. 

நக்சலைட்டுகளை ஒடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இதனிடையே, சத்தீஷ்கரில்  10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியுள்ளது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்க உள்ளது.  இதற்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை தீவிரமாக மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், அம்மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு 10 மற்றும் 12-ம் வகுப்பு வினாத்தாள்கள் ஹெலிகாப்டரில் கொண்டு செல்லப்பட்டன. சுக்மா நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த மாவட்டம் என்பதால் பாதுகாப்பு நலன் கருதி வினாத்தாள்கள் ஹெலிகாப்டர் மூலம் சுக்மா மாவட்டத்தின் ஜகர்குண்டா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. 

 நக்சலைட்டுகள் ஆதிக்கம் காரணமாக கடந்த ஆண்டும் இதே போல் ஹெலிகாப்டர் மூலமாக வினாத்தாள்கள் கொண்டு செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து